தானத்தில் சிறந்த ரத்ததான முகாம் கெராக்கான் கட்சியினரால் ஏற்பாடு – 100க்கும் மேற்பட்டோர் பதிவு

தானத்தில் சிறந்தது ரத்த தானம் என்று கூறுவர். ஏனெனில் மற்ற தானங்களை விட ஒரு உயிரை காப்பாற்ற உதவுகிறது. கோவிட் தொற்றின் காரணமாக தேசிய ரத்த வங்கியின் தகவலில் அடிப்படையில் ரத்த பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அதனை நிவர்த்தி  செய்ய வேண்டும் என்ற நோக்கில் கெராக்கான் ரத்த தான முகாம் ஒன்றினை அண்மையில் நடத்தியது.

ரத்ததானம் வழங்க மற்றவர்களை அறிவுறுத்தும் வேளையில் நாம் அதற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில்   கெராக்கான் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ், கட்சியின் உதவித் தலைவர் டத்தோ பரமேஸ்வரன், மா கோ கியோங், தேசிய பொருளாளர் எங் சிவ் வாய் ஆகியோர் ரத்ததானம் வழங்கினார்.

மேலும் 100க்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்தனர். ஆனால் 60 பேர் மட்டுமே ரத்ததானம் வழங்க முடிந்ததாக கட்சியின் உதவித்தலைவர் டத்தோ பரம் தெரிவித்தார்.  கோவிட் தொற்றின் காரணமாக பலர் ரத்ததானம் வழங்குவதற்கு தயங்குகின்றனர். ஆனால் அனைத்து காலகட்டங்களிலும் ரத்தம் தேவைப்படுபவர்கள் இருக்கின்றனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here