இந்தியா, இலங்கை, வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் குடிமக்கள் மீண்டும் மலேசியாவிற்குள் நுழைய அனுமதி

பெட்டாலிங் ஜெயா: இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மீண்டும் மலேசியாவிற்குள் நுழைவதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளது.

தெற்காசிய நாடுகளில் இருந்து அந்த நாட்டு குடிமக்கள் நுழைவதற்கான கூடுதல் கட்டுப்பாடுகள் மீட்டுக்கொண்டதற்கான அறிவிப்பு செப்டம்பர் 20, 2021 தேதியிடப்பட்ட மலேசியாவின் குடிவரவு இயக்குநரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் செப்டம்பர் 8 அன்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற தொற்றுநோய் மேலாண்மை சிறப்பு குழு கூட்டத்தில் இந்த இந்த தீர்மானம் முடிவு செய்யப்பட்டது. இதனை மலேசிய குடிவரவுத்துறை (JIM) நாட்டில் விதிக்கப்பட்ட கூடுதல் கட்டுப்பாடுகளை மீட்டுக்கொண்டதற்கான அறிவிப்பு  உடனடியாக அமல்படுத்தி முடிவுக்குக் கொண்டுவந்தது.

இருப்பினும், குடிவரவுத்துறை பகுதி (unit) தலைவர்கள் மற்றும் ஐந்து வெளிநாட்டு தூதரகங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், இந்த அனுமதி மலேசிய நிரந்தர குடியிருப்பாளர்கள், நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள், வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் வகையை உள்ளடக்கியது என்றும் சம்பந்தப்பட்ட குடிமக்களின் நுழைவு கவனமாக கண்காணிக்கப்படும் என்றும் JIM டைரக்டர் ஜெனரல் கைருல் டைமி டாட் கூறினார்.

“கோவிட் -19 இன் புதிய மாறுபாடுகளைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சகம் (MOH) அமைத்தபடி, மலேசியாவிற்கு வருகை தருபவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்குப் பிறகு முழுமையான தடுப்பூசி, ஸ்கிரீனிங் சோதனை நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்” என்று அவர் கூறினார்.

மே 5 அன்று, இலங்கை, வங்கதேசம், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் குடிமக்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மேலும் ஏப்ரல் 26 ம் தேதி அன்று இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது .

முன்னாள் மூத்த அமைச்சராக (பாதுகாப்பு) இருந்த இஸ்மாயில் சப்ரி யாகோப், இந்த தடை நீண்ட கால சமூக வருகை பாஸ் மற்றும் வணிக பார்வையாளர்கள் உட்பட அனைத்து வகை பயணிகளுக்கும் பொருந்தும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

-எஃப். எம்.ரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here