சீனாவில் சிறையிலடைக்கப்பட்டிருந்த கனேடியர்கள் இருவரும் விடுதலை..அம்பலமான சீனாவின் கபட நாடகம்

உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு சீனாவால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த கனேடியர்கள் இருவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்கள் முன் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 12 நிமிடங்களுக்கு முன் Michael Spavorம், Michael Kovrigம் சீன விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு விட்டார்கள். அவர்கள் கனடாவுக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள் என்றார்.

வடகொரியா மற்றும் சீனாவில் பணியாற்றிய கனேடிய தொழிலதிபரான Michael Spavor என்பவரும், முன்னாள் கனேடிய தூதரக அலுவலரான Michael Kovrig என்பவரும் உளவு பார்த்ததாக சீனாவால் கைது செய்யப்பட்டு 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள்.

அவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், விமானத்தில் வீடு நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

உண்மையில், இந்த விடயத்துக்குப் பின்னால் சீனாவின் கபட நாடகம் ஒன்று உள்ளது. 2018ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 1ஆம் திகதி, அமெரிக்காவின் கோரிக்கையின் பேரில், சீன நிறுவனமான Huawei Technologieயின் தலைமை பொருளாதார அலுவலரான Meng Wanzhou என்னும் பெண்மணி, வான்கூவரில் வைத்து கனடா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கனடா அவரை கைது செய்ததால், உடனடியாக, பழிவாங்கும் நடவடிக்கையாக சீனா கனேடியர்களான Michael Spavorஐயும், Michael Kovrigஐயும் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி கைது செய்தது.

சீனா Mengஇன் கைதுக்காக பழிவாங்கத்தான் Michael Spavorஐயும், Michael Kovrigஐயும் கைது செய்தது என்பது உலகுக்கே தெரியும். ஆனாலும், சீனா தான் பழிவாங்குவதற்காக Michael Spavorஐயும், Michael Kovrigஐயும் கைது செய்யவில்லை, அவர்கள் உளவு பார்த்தார்கள் என்றே கூறிவந்தது.

இந்நிலையில், திடீரென Meng மீதான வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அவர் நேற்று இரவு 7.30 மணிக்கே வான்கூவர் விமான நிலையத்திலிருந்து சீனா புறப்பட்டுவிட்டார்.

அவர் விடுவிக்கப்பட்ட அதே நேரத்தில், சீனா Michael Spavorஐயும், Michael Kovrigஐயும் விடுவித்துள்ளது. அவர்களும் சரியாக நேற்று இரவு 7.30 மணிக்கு சீனாவிலிருந்து புறப்பட்டு விட்டார்கள். இதன் பின்னணியில், அமெரிக்க அதிபர் இருப்பதாக கருதப்படுகிறது.

இந்நிலையில், இதுவரை உளவு பார்த்ததாக Michael Spavorஐயும், Michael Kovrigஐயும் கைது செய்ததாக சீனா கூறிவந்த நிலையில், Meng விடுவிக்கப்பட்டதும், அவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதால், சீனா கூறியது பொய் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here