ஐரோப்பா நாடான பிரிட்டனில், பல பகுதிகளில் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் இருப்பு இல்லை. இதனால் இருப்பு உள்ள பெட்ரோல் நிலையங்களின் அருகில் நீண்ட தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஆனால் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று அரசு மறுத்துள்ளது.
கொரோனா பரவல் மற்றும் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தால் பல எரிபொருள் டேங்கர்கள் உரிய நேரத்தில் வந்து சேரவில்லை என்றும், இதனாலேயே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பிரெக்ஸிட் மற்றும் கொரோனா பாதிப்பின் காரணமாக ஒரு லட்சம் லோரி ஓட்டுநர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாக கனரக வாகனங்கள் துறை கணக்கிட்டு உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறிய 25 ஆயிரம் கனரக வாகன ஓட்டுநர்கள் நாடு திரும்பவில்லை.
மேலும் 40 ஆயிரம் பேர் கனரக வாகனங்கள் ஓட்டுநர் தேர்வை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, லோரி ஓட்டுநர்கள் பற்றாக்குறையும் அங்கு நிலவுவது குறிப்பிடத்தக்கது.