சீனாவின் இ-கொமேர்ஸ் (E-Commerce) நிறுவனங்களில் ஒன்றான ஜே.டி காம் (JD.com) நிறுவனம் ஏற்கெனவே 200 தானியங்கி ரோபோக்களை விநியோக (delivery) சேவைக்கு பயன்படுத்தி வருகின்றது . இந்த வருட இறுதிக்குள் 1000 டெலிவரி ரோபோக்களை சேவைக்கு அதிகளவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
கொரோனா காலகட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே ஏற்படும் தொடர்பினை தவிர்க்க இந்த தொழில்நுட்பமானது முக்கிய பங்காற்றியுள்ளது.
வுஹான் மற்றும் ஷிஜியாஜுவாங் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டிருந்த கடுமையான கோவிட் தொற்றுப்பரவலைத் தொடர்ந்து, கோவிட் -19 நிவாரணப் பணிகளுக்காக அதன் டெலிவரி ரோபோக்கள் மூன்றாவது முறையாக அனுப்பப்பட்டதாக இ-காமர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் தானியங்கி விநியோக வாகனங்களுக்கான சாலை சோதனை உரிமத் தகடுகளைப் (road test license plates) பெற்ற சீனாவின் முதல் மூன்று நிறுவனங்களில் ஜே.டி நிறுவனமும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.