முகநூல், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் அனைத்தும் மீண்டும் வழக்க நிலைக்கு வந்துள்ளன

முகநூல், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் அனைத்தும்  மீண்டும் வழக்க நிலைக்கு வந்துள்ளன. இந்த பயன்பாடுகளின் வரலாற்றில் இது மிக நீண்ட நேர செயலிழப்பு என அறியப்படுகிறது.

முகநூலின் கீழ் உள்ள இந்த செயலிகள், நேற்று (மலேசிய நேரப்படி) இரவு 11 மணியளவில் செயலிழந்தன. மேலும் அவை பெரும்பாலும் ஆறு மணி நேரத்திற்கு மேல் அணுக முடியாமல் இருந்தன. இருப்பினும், சில பகுதிகளில் சேவை மீட்க அதிக நேரம் எடுத்தது.

இணையதள கண்காணிப்பு குழு டவுன்டெக்டரின் கூற்றுப்படி, இது இதுவரை கண்டிராத மிகப்பெரிய தோல்வி இது என்றது. மூன்று பயன்பாடுகளும் இப்போது சாதாரணமாக வேலை செய்கின்றன. ராய்ட்டர்ஸால் மேற்கோள் காட்டப்பட்ட சில வல்லுநர்கள், உள் பிழைகள் காரணமாக செயலிழப்பு ஏற்படலாம் என்று கூறினாலும், இது நாசவேலையாக இருக்கலாம் என்பதனையும் நிராகரிக்கவில்லை.

தோல்விக்கான காரணம் குறித்து முகநூல் இன்னும் கூடுதல் தகவல்களை வெளியிடவில்லை. இந்த செயலிழப்பு தொழில்நுட்ப நிறுவனத்திற்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. விளம்பர வருவாய் டிராக்கர் ஸ்டாண்டர்டு மீடியா இன்டெக்ஸ் நிறுவனம் தனது தளங்கள் அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு மணி நேரமும் US $ 545,000 (RM2.75 மில்லியன்) இழந்துள்ளதாக மதிப்பிட்டுள்ளது.

ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான டுவிட்டரில் பல புகார்கள் இருந்தது. மற்ற சேவைகள் செயலிழந்துவிட்டதாக பல பயனர்கள் இதில் புகார் செய்தனர். இது 2.8 மில்லியனை பிடித்தது மற்றும் 708,000 மறு டுவிட்களை வெறும் ஏழு மணி நேரத்தில் பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here