உலகின் டாப் 11 எலைட் கோடீஸ்வரர்கள் பட்டியலில் நுழைந்த முகேஷ் அம்பானி – முதல் 10 பேர் யார் யார்?

ஜெஃப் பெஸோஸ், எலான் மஸ்க் என 100 பில்லியன் சொத்து மதிப்பை கொண்டிருக்கும் தனித்துவமான உலகின் டாப் 11 பெரும் செல்வந்தர்களின் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் தலைவர் முகேஷ் அம்பானி இணைந்துள்ளார்.ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி ஆசியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரராக திகழ்கிறார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு நடப்பு ஆண்டில் மட்டும் 23.8 பில்லியன் டாலர்களாக அதிகரித்தன் காரணமாக அவருடைய சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களை கடந்திருக்கிறது.

இதன் மூலம் 100 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பை கடந்த கோடீஸ்வரர்களின் 11 பேர் கொண்ட தனித்துவமான பட்டியலில் முகேஷ் அம்பானி 11ஆவதாக இணைந்துள்ளார். அக்டோபர் 8ம் தேதியன்று முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 100.6 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதாக புளூம்பெர்க் செய்தி வெளியிட்டிருக்கிறது. முகேஷ் அம்பானி தவிர்த்து இந்த தனித்துவமான கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் மற்ற 10 பேர் யார் யார் என தற்போது பார்க்கலாம்.

 10வது இடம் வாரன் பஃபெட்: வாரன் பஃபெட் ஒரு அமெரிக்க வணிக மேதை, முதலீட்டாளர் மற்றும் நன்கொடையாளர். அவர் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். உலகின் சிறந்த முதலீட்டாளர் என பெயரெடுத்தவர். அவருடைய சொத்து மதிப்பு தற்போது 101.1 பில்லியன் டாலர்களாக இருக்கிறது.

10ஆவது இடம் வாரன் பஃபெட்: வாரன் பஃபெட் ஒரு அமெரிக்க வணிக மேதை, முதலீட்டாளர் மற்றும் நன்கொடையாளர். அவர் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். உலகின் சிறந்த முதலீட்டாளர் என பெயரெடுத்தவர். அவருடைய சொத்து மதிப்பு தற்போது 101.1 பில்லியன் டாலர்களாக இருக்கிறது.

 9வது இடம் ஸ்டீவ் பால்மர்: 2000 முதல் 2014ம் ஆண்டு வரை மைக்ரோசாஃட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் ஸ்டீவ் பால்மர். இவர் என்.பி.ஏ வின் கூடைப்பந்து அணியான லாஸ் ஏஞ்செல்ஸ் கிளிப்பர்ஸ் அணியின் உரிமையாளர் ஆவார். இவருடைய சொத்து மதிப்பு 102 பில்லியன் டாலர்கள்.9வது இடம் ஸ்டீவ் பால்மர்: 2000 முதல் 2014ம் ஆண்டு வரை மைக்ரோசாஃட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் ஸ்டீவ் பால்மர். இவர் என்.பி.ஏ வின் கூடைப்பந்து அணியான லாஸ் ஏஞ்செல்ஸ் கிளிப்பர்ஸ் அணியின் உரிமையாளர் ஆவார். இவருடைய சொத்து மதிப்பு 102 பில்லியன் டாலர்கள்.

 8வது இடம் லேரி எலிசன்: அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆரக்கிள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான லேரி எலிசன் அந்நிறுவனத்தின் முன்னாள் செயல் அதிகாரியாக இருந்தார். அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கூட்டத்தின் 41வது பெரிய தீவாக விளங்கும் லனாய்-ன் உரிமையாளர். இத்தீவின் மக்கள் தொகை 3000. இவருடைய சொத்து மதிப்பு 103.6 பில்லியன் டாலர்கள்.8வது இடம் லேரி எலிசன்: அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆரக்கிள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான லேரி எலிசன் அந்நிறுவனத்தின் முன்னாள் செயல் அதிகாரியாக இருந்தார். அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கூட்டத்தின் 41வது பெரிய தீவாக விளங்கும் லனாய்-ன் உரிமையாளர். இத்தீவின் மக்கள் தொகை 3000. இவருடைய சொத்து மதிப்பு 103.6 பில்லியன் டாலர்கள்.

 7வது இடம் செர்ஜி பிரின்: லேரி பேஜ் உடன் இணைந்து கூகுளை நிறுவியவர் செர்ஜி பிரின். 2019ம் ஆண்டு வரை கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட்டின் தலைவராக இருந்தார். செர்ஜி பிரின் சொத்து மதிப்பு 115.2 பில்லியன் டாலர்கள் ஆகும்.7வது இடம் செர்ஜி பிரின்: லேரி பேஜ் உடன் இணைந்து கூகுளை நிறுவியவர் செர்ஜி பிரின். 2019ம் ஆண்டு வரை கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட்டின் தலைவராக இருந்தார். செர்ஜி பிரின் சொத்து மதிப்பு 115.2 பில்லியன் டாலர்கள் ஆகும்.

 6வது இடம் மார்க் ஸக்கர்பர்க்: இவருக்கு அறிமுகமே தேவைப்படாது. ஃபேஸ்புக்கின் நிறுவனர்களுள் ஒருவர். வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் நிறுவனங்களில் சொந்தக்காரர். மார்கின் சொத்து மதிப்பு 123 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

6வது இடம் மார்க் ஸக்கர்பர்க்: இவருக்கு அறிமுகமே தேவைப்படாது. ஃபேஸ்புக்கின் நிறுவனர்களுள் ஒருவர். வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் நிறுவனங்களில் சொந்தக்காரர். மார்கின் சொத்து மதிப்பு 123 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

 5வது இடம் லேரி பேஜ்: உலகப் புகழ் பெற்ற கூகுள் நிறுவனத்தின் தலைவர் தான் லேரி பேஜ். இவருடைய சொத்து மதிப்பு 124.5 பில்லியன் டாலர்கள்.

5வது இடம் லேரி பேஜ்: உலகப் புகழ் பெற்ற கூகுள் நிறுவனத்தின் தலைவர் தான் லேரி பேஜ். இவருடைய சொத்து மதிப்பு 124.5 பில்லியன் டாலர்கள்.

 

 4வது இடம் பில் கேட்ஸ்: உலகின் கம்ப்யூட்டர் புரட்சியை தொடங்கி வைத்தவர் பில்கேட்ஸ். உலக கோடீஸ்வரகளின் பட்டியலில் நீண்ட ஆண்டுகளுக்கு முதலிடத்தில் இருந்தார். செல்வந்தராக இருந்தாலும் நன்கொடைகளை வாரி வழங்குபவர் என பெயரெடுத்தவர். மைக்ரோசாஃப் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர். இவருடைய சொத்து மதிப்பு 127.9 பில்லியன்.4வது இடம் பில் கேட்ஸ்: உலகின் கம்ப்யூட்டர் புரட்சியை தொடங்கி வைத்தவர் பில்கேட்ஸ். உலக கோடீஸ்வரகளின் பட்டியலில் நீண்ட ஆண்டுகளுக்கு முதலிடத்தில் இருந்தார். செல்வந்தராக இருந்தாலும் நன்கொடைகளை வாரி வழங்குபவர் என பெயரெடுத்தவர். மைக்ரோசாஃப் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர். இவருடைய சொத்து மதிப்பு 127.9 பில்லியன்.

 3வது இடம்: பெர்னார்ட் அர்னால்ட்: பிரான்ஸ் நாட்டின் புகழ்மிக்க மனிதர் பெர்னார்ட் அன்னால்ர். உலகின் சொகுசு சரக்கு வர்த்தகத்தின் முதன்மையானது இவருடைய LVMH Moët Hennessy – Louis Vuitton SE நிறுவனம். இவரின் சொத்து மதிப்பு 155.6 பில்லியன் டாலர்கள்.3வது இடம்: பெர்னார்ட் அர்னால்ட்: பிரான்ஸ் நாட்டின் புகழ்மிக்க மனிதர் பெர்னார்ட் அன்னால்ர். உலகின் சொகுசு சரக்கு வர்த்தகத்தின் முதன்மையானது இவருடைய LVMH Moët Hennessy – Louis Vuitton SE நிறுவனம். இவரின் சொத்து மதிப்பு 155.6 பில்லியன் டாலர்கள்.

 

 2வது இடம் ஜெஃப் பெசோஸ்: அமெரிக்க புகழ் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ் என்னற்ற தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். இவரின் சொத்து மதிப்பு 190.8 பில்லியன் டாலர்கள்.

 

2வது இடம் ஜெஃப் பெசோஸ்: அமெரிக்க புகழ் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ் என்னற்ற தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். இவரின் சொத்து மதிப்பு 190.8 பில்லியன் டாலர்கள்.

 

 முதல் இடம் எலான் மஸ்க்: உலகின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் தனித்துவ நபராக விளங்குபவர் எலான் மஸ்க், ஏனெனில் இவருடைய சொத்து மதிப்பு 200 பில்லியனை கடந்திருக்கிறது. இவர் மட்டுமே இந்த பெருமைக்கு உரியவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, Neuralink, OpenAI, The Boring Company போன்ற நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் தான் உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் ஆக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு 222.1 பில்லியன் டாலர்கள் ஆகும்.முதல் இடம் எலான் மஸ்க்: உலகின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் தனித்துவ நபராக விளங்குபவர் எலான் மஸ்க், ஏனெனில் இவருடைய சொத்து மதிப்பு 200 பில்லியனை கடந்திருக்கிறது. இவர் மட்டுமே இந்த பெருமைக்கு உரியவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, Neuralink, OpenAI, The Boring Company போன்ற நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் தான் உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் ஆக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு 222.1 பில்லியன் டாலர்கள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here