இதுவரை 115,516 ஓராங் அஸ்லியினருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

புத்ராஜெயா: நேற்றைய நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 115,516 ஓராங் அஸ்லியினர் அவர்களின் கோவிட் -19 தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.

கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ மஹ்சீர் காலிட், கருத்து தெரிஜ்ஜ்விக்கையில், இந்த எண்ணிக்கை 172,155 மொத்த ஓராங் அஸ்லி மக்களில் 67 விழுக்காடை உள்ளடக்கியது என்று கூறினார்.

ஏனைய 56,639 பேருக்கு தடுப்பூசி போட அமைச்சகம் பல்வேறு வழிகளில் செயல்பட்டு வருகின்றது என்றார்.

மராலைனர் பேருந்துகளை பேராக், பகாங் மற்றும் கிளந்தானில் உள்ள நடமாடும் தடுப்பூசி மையங்களாக (PPVB) மேம்படுத்துவதன் மூலம் ஓராங் அஸ்லி குடியேற்றங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் ஆகியவை முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளில் ஒன்றாகும்.

“ஓராங் அஸ்லிக்கு கோவிட் -19 தடுப்பூசி  போடுவதை உறுதி செய்வதற்காக இந்த வெளியீட்டுத் திட்டத்தை நாங்கள் தொடருவோம்” என்று அவர் இன்று தனது அமைச்சகத்தில் தேசிய விளையாட்டு தினம் (HSN 2021) நிகழ்ச்சியில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து கிளந்தானின் குவா முசாங்கின் உட்புறங்களில் உள்ள ஓராங் அஸ்லி சமூகத்திற்கு கேன்சினோ தடுப்பூசியை அரசாங்கம் வழங்கியதாக மஹ்சீர் கூறினார்.

ஒரு ஒற்றை டோஸ் ஊசியை மட்டுமே உள்ளடக்கிய திட்டம் அவர்களுக்கு மிக இலகுவாக இருக்கும் என்று கூறினார்.

“இந்த ஓராங் அஸ்லியினர் அனைவருக்கும் தடுப்பூசி போடும் வரை இந்த திட்டம் மாநிலங்களில் உள்ள ஓராங் அஸ்லி மேம்பாட்டுத் துறை (JAKOA) மற்றும் Tok batin (பழங்குடி தலைவர்கள்) ஆதரவு மற்றும் உதவியுடன் இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

“இதுவரை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தடுப்பூசி போதுமானதாக இருந்தது. மொத்தத்தில், 67 விழுக்காட்டினர் ஃபைசர் கோர்மினாட்டி தடுப்பூசியும், 10 விழுக்காட்டினர் கேன்சினோ தடுப்பூசியும் பெற்றனர்,” என்று அவர் கூறினார்.

அமைச்சு மட்டத்தில் HSN 2021 கலப்பு வடிவத்தில் (hybrid format) உடல் ஏரோபிக்ஸ் நடவடிக்கைகளில் பங்கேற்ற துறைகளின் தலைவர்கள் உட்பட 100 அமைச்சக ஊழியர்கள் பங்கேற்றனர்.

அமைச்சகத்தின் கீழ் உள்ள 10 நிறுவனங்களில் இருந்து மேலும் 600 ஊழியர்கள் நாடு முழுவதும் ஆன்லைன் ஏரோபிக்ஸ் நடவடிக்கைகளில் பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here