ஒரே மாதத்தில் 3 தடவைகள் ஆயுதம் தாங்கிய கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 18 ஆண்டுகள் சிறை

புத்ராஜெயா: கடந்த ஆண்டு ஆயுதம் தாங்கி கொள்ளையில் ஈடுபட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தொழிற்சாலை ஊழியருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை, மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.

முஹமட் ஜபிதீன் முஹமட் தியா தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வில், முஹமட் ஹாபிஸி அப்துல் லத்தீப் என்ற குற்றம் சாட்டப்பட்டவர், குறுகிய காலத்தில் வெவ்வேறு பாதிக்கப்பட்டவர்கள் மீது இரண்டு குற்றங்களைச் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

“குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அவருக்கு எந்த தகுதியும் இல்லை” என்று நீதிபதி பி.ரவிந்திரன் மற்றும் சி முஹமட் ருசிமா கஜாலியுடன் அமர்ந்திருந்த ஜபிடின் கூறினார்.

செஷன்ஸ் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மூன்று பிரம்படிகளையும் நீதிபதிகள் உறுதி செய்தனர்.

கடந்த ஜனவரி 10 ஆம் தேதி அதிகாலை 3.45 மணியளவில் ஜாலான் செக்‌ஷன் 3 இல், அஸ்ரஃப் கமலின் 25 வெள்ளி ரொக்கம், ஒரு கையடக்க தொலைபேசி மற்றும் அவரது அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் பற்று அட்டை அடங்கிய பையை கொள்ளையடித்தார்.

அதே நாளில் சிறிது நேரம் கழித்து, அவர் நூருல் அஃப்வான் முஹமட் யூசோஃப் என்பவரின் 328 வெள்ளி ரொக்கம் மற்றும் ஒரு கையடக்க தொலைபேசி என்பவற்றை பண்டார் ஶ்ரீ புத்ரா பாங்கி எனும் இடத்தில் உள்ள 24 மணி நேர கடையில் கொள்ளையடித்தார்.

மூன்றாவது குற்றச்சாட்டு, மூன்று நாட்களுக்கு முன்பு நண்பகல் 2 மணியளவில் பண்டார் பாரு கஜாங்கில் இசடே ஷம்சூரி என்பவரது 292 வெள்ளி ரொக்கம் மற்றும் ஒரு ஜோடி காலணிகளை கொள்ளையடித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் இந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் கத்தியை ஏந்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றவாளி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முஹமட் ரஃபீக் அப்துல் ரஷீத் , குறைந்தபட்ச தண்டணையாக முதல் இரண்டு குற்றங்களுக்கும் ஒரே நேரத்தில் நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்குமாறும் (ஒரே நாளில் செய்தது) மூன்றாவது குற்றத்திற்கு ஆறு வருட சிறைத்தண்டனையும் வழங்கி மொத்தமாக குற்றவாளிக்கு 12 வருடங்கள் சிறை வழங்க கோரி மனுச்செய்தார்.

இருப்பினும், துணை அரசு வழக்கறிஞர் நஹ்ரா டொல்லா, நீதிமன்றத்திடம்  குற்றவாளிக்கு வழங்கப்பட்ட 18 வருட சிறை தண்டனையை (மூன்று குற்றங்களுக்கான ஆறு மாத தண்டனைகள் தொடர்ச்சியாக நடைமுறை படுத்தப்படும்) வழங்க வலியுறுத்தியதுடன், குற்றவாளிக்கு அதிகபட்சமாக 14 ஆண்டு சிறைத்தண்டனையும் அபராதமும் அல்லது பிரம்படிகளும் விதிக்கப்பட வேண்டும் என்று கோரினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here