காணாமல் போயிருக்கும் மனநலம் குன்றியவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் போலீசார்

குவாந்தான்: திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் 36 வயது உடல்பேறுக் குறைந்த (மனநலம் குன்றியவர்) நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை போலீசார் நாடுகின்றனர். சப்ரி இஸ்மாயில் என்ற அந்த நபர் காணாமல் போனது குறித்து சனிக்கிழமை இரவு 9.29 மணியளவில் புகார் கிடைத்ததாக ஜெராண்டுட் காவல்துறைத் தலைவர் சுப்ரி சுக்ரி முஹம்மது ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

178 செ.மீ உயரமும் 90 கிலோ எடையும் கொண்ட அந்த ஆடவர் (மனநலம் குன்றியவர்), ஜூன் 2 ஆம் தேதி பகாங், ஜெராண்டுட், தாமான் ஸ்ரீ எம்பான் அருகே கடைசியாகக் காணப்பட்டதாக அவர் கூறினார். தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் செல்லுமாறு அல்லது ஜெராண்டுட் காவல் தலைமையகக் கட்டுப்பாட்டு மையத்தை 09-266 2222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here