ஆபத்தான முறையில் மோட்டார் வண்டி ஓட்டிச் சென்றதாக , ஒரு மாணவர் உட்பட 4 பேர் கைது

போர்ட்டிக்சன், அக்டோபர் 20:

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சமூக ஊடகங்களில் பரவிய வீடியோவில் காட்டப்பட்டுள்ளபடி, சிரம்பான் -போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் மோட்டார் வண்டி ஓட்டிய ஏழு மோட்டார் சைக்கிள் ஓட்டிகளில் ஒரு மாணவர் உட்பட நான்கு பேரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

போர்ட்டிக்சன் மாவட்ட காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் ஐடி ஷாம் முஹமட் கூறுகையில், போர்ட்டிக்சன் போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த காவல்துறை குழுவினர் மத்திய மலாக்கா காவல் தலைமையகத்தின் (IPD) அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து உறுப்பினர்களுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், குறித்த காணொளியில் இருந்த நான்கு மோட்டார் சைக்கிளோட்டிகளை கைது செய்தனர்.

17 வயது முதல் 18 வயதுடைய அனைவரும் புக்கிட் ரம்பாய் மற்றும் செங் மலாக்கா பகுதிகளில் உள்ள தனித்தனி இடங்களில் வைத்து இன்று அதிகாலை 1 மணி முதல் 4 மணி வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் தடுத்து வைக்கப்பட்டனர்.

“அவர்கள் போர்ட்டிக்சன் ஐபிடியில் புதன்கிழமை தொடங்கி விசாரணைக்காக மூன்று நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இவ்வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் (JPJ) 1987 பிரிவு 42 (1) இன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது” என்று இன்று ஒரு அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.

இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஐந்து வருடங்களுக்கும் குறைவான சிறைத்தண்டனையும், 5,000 வெள்ளி முதல் 15,000 வெள்ளி வரை அபராதமும், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஓட்டுநர் உரிமத்திற்கான தகுதியிழப்பும் விதிக்கப்படலாம்.

“உபா”, “டார்விசி” மற்றும் “ஆஃபிக்” என அழைக்கப்படும் ஏனைய மூன்று மோட்டார் வண்டி ஓட்டுநர்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன, “என்று அவர் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் முகநூலில் வைரலான காணொளியில் காட்டப்பட்டுள்ளபடி, இங்குள்ள சிரம்பான் – போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையில் ஏழு பேர் தங்கள் உடல்களை வளைத்தும், ஒருவருக்கொருவர் போட்டியிட்டு கொண்டும், தங்களுக்கும் மற்றும் மற்றவர்களுக்கும் ஆபத்தை விளைவிப்பதாக நம்பப்படும் ஜிக் ஜாக் ஸ்டண்ட்களை உருவாக்கி மோட்டார் சைக்கிள்களில் சவாரி செய்ததை அது காட்சிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here