சிரியாவில் வேண்டுமென்றே பேரழிவை ஏற்படுத்த எண்ணி, காட்டுத்தீயை ஏற்படுத்திய 24 பேருக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
சிரியாவில் ஏற்பட்ட இந்தக்காட்டுத்தீ மூன்று மாகாணங்களுக்கு பரவியதுடன் இந்தச்சம்பவத்தில் 280 நகரங்கள் மற்றும் கிராமங்கள் பெரிதும் பாதிப்படைந்தன.
மேலும் இக்காட்டுத்தீயால் சிரியாவில் 32 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் அழிந்துள்ளதாகவும் 370 வீடுகள் தீக்கிரையானதாகவும் 3 பேர் தீயில் சிக்கி உயிரிழந்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
சிரியாவில் இந்த காட்டுத்தீயானது திட்டமிட்டு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரனையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய 24 பேரை போலீஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காட்டுத்தீயை வேண்டுமென்றே உருவாக்கிய 24 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்பளித்தது.
இந்நிலையில் அவர்கள் அனைவருக்குமான மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு நீதித்துறை நேற்று (21) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.








