அர்ஜெண்டினா, நெதர்லாந்து காற்பந்து அணிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை- அனைத்துலக காற்பந்துச் சம்மேளனம்

அர்ஜெண்டினா, நெதர்லாந்து ஆகிய காற்பந்து அணிகளுக்கு எதிராக அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்கிறது. இரு அணிகளும் மோதிய காலிறுதியாட்டத்தில் சண்டையும் மோதல்களும் இடம்பெற்றதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பெனால்டி வாய்ப்புகளில் அர்ஜெண்டினா வெற்றி பெற்ற அந்த ஆட்டத்தில், விளையாட்டாளர்களின் தப்பாட்டத்தைக் கண்டித்து மொத்தம் 18 பேருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஓர் உலகக் கிண்ண ஆட்டத்தில் இத்தனை முறை மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது இதுவே முதல்முறை.

ஆட்டம் நிறைவடைந்த பிறகு, நெதர்லாந்தின் டென்ஸல் டம்ஃபிரீஸுக்கு சிவப்பு அட்டையும் காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தில் நடுவர் நடந்துகொண்ட விதத்தை லயனல் மெஸ்ஸி உட்பட அர்ஜெண்டினா வீரர்கள் கடுமையாக சாடினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here