ரஷ்யாவின் வெடி மருந்து தொழிற்சாலையில் விபத்து – 16 பேர் உயிரிழப்பு, 9 பேரைக் காணவில்லை

ரஷ்யாவில் ரியாசான் பகுதியில் உள்ள வெடி மருந்துத் தொழிற்சாலையில் இன்று பயங்கர வெடி சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தினால் தொழிற்சாலையின் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.

மேலும் இதுவரை 16 பேர் வரை பலியாகி உள்ளனர். ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 9 பேர் விபத்தில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.

விபத்து மீட்புப் பணிகளுக்காக 170 மீட்புப் படை வீரர்கள் மீட்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிற்சாலையில் வெடி மருந்துகளை பாதுகாப்பாக கையாளத் தவறியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த வெடி விபத்து தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here