பெருநாள் காலத்தைச் சிறப்புக் கழிவோடு வரவேற்கும் மலபார்

கோலாலம்பூர், அக். 26-

இந்தப் பெருநாள் காலகட்டத்தில் உலக அளவில் பத்து நாடுகளில் 260 கிளைகளைக் கொண்டுள்ள மிகப்பெரிய நகை விற்பனையாளர்களான MALABAR GOLD & DIAMONDS குழுமத்தினர் தங்களின் வாடிக்கையாளர்களுக்குக் கவர்ச்சிகரமான சிறப்புக் கழிவுகளை அறிவித்துள்ளனர்.

குறிப்பாக தங்க, வைர நகைகளை வாங்குவோருக்குத் தங்க நாணயங்கள் வழங்கும் வாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இந்தப் பெருநாள் காலத்தில் மலபார் குழுமம் பண்டிகைகளுக்கான பிரத்தியேக நகைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

தங்க-வைர உருவாக்கத்தில் அந்நகைகள் கண்களைக் கவரும் வண்ணம் உள்ளன. அவை நியாய விலையில் விற்கப்படுவதால் வாடிக்கையாளர்களைக் கட்டாயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ‘Artistry Edition’ எனும் கலைத்திறன் மிக்க நகை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் வைரம், முத்து, பவளம் போன்ற விலைமதிப்புமிக்க கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த நகைகள் சிறப்பு நிகழ்ச்சிகளில் தனித்துவமாகத் தெரியும்.

தகுதிவாய்ந்த பொற்கொல்லர் மூலம் உருவாக்கப்படும் இந்நகைகள் குடும்பத்தின் பாரம்பரிய சொத்தாகவும் ஆக்கிக்கொள்ளலாம். தற்போது MALABAR GOLD & DIAMONDS தனது புதிய கழிவுகளை அறிவித்தாலும் வாடிக்கையாளர்கள் அக்டோபர் 21ஆம் தேதி தொடங்கி இவ்வாண்டு நவம்பர் 2ஆம் தேதி வரை தங்க – வைர நகைகளை வாங்கும்போது உறுதிப்படுத்தப்பட்ட தங்க நாணயங்களைப் பெறலாம்.
அடுத்த 6 மாதங்கள் பண்டிகைகள் நிறைந்த மாதங்களாகும். மேலும் பெரும்பாலான தளர்வுகள் வழங்கப்பட்டது மட்டுமன்றி சுற்றுப்பயணிகள் வருவதால் சந்தையில் குறிப்பிடத்தக்க உருமாற்றத்தை நாம் எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளோம்.

பெருநாள் காலம் வருவதால் வரும் வாரங்களில் நமது கிளைகளில் வாடிக்கையாளர்கள் வரவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று MALABAR GOLD & DIAMONDS குழுமத்தின் அனைத்துலகச் செயல்பாடுகள் – நிர்வாக இயக்குநர் ஷாம்லால் அகமட் தெரிவித்தார்.

புதிய வடிவிலான நகைகளைச் சிறந்த விலையில் பெறுவது மட்டுமன்றி உறுதிப்படுத்தப்பட்ட தங்க நாணயங்கள் கிடைக்கச் செய்யும் வாய்ப்பினை எதிர்கொள்வதால் வாடிக்கையாளர்கள் சிறந்ததோர் அனுபவத்தை உருவாக்கவும் நாங்கள் முனைந்துள்ளோம் என்றார் அவர்.

குறிப்பிட்ட இந்நாட்களில் அனைத்து கிளைகளிலும் செயல்பாட்டு நேரம் அதிகரிக்கப்படுகின்றது. வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் நகைகளைப் பொறுமையாக வாங்குவதற்கு வகை செய்கின்றது.

அதேசமயத்தில் வாடிக்கையாளர்களும் தங்க விலைப் பாதுகாப்பு விகிதத்தைப் பெறவும் MALABAR GOLD & DIAMONDS வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றது. இதன்வழி வாடிக்கையாளர்கள் முன்னதாக முன்பதிவு செய்துகொண்டபோது இருந்த தங்க விலையைக் காட்டிலும் அவர்கள் தங்கம் வாங்கும் நாளன்று தங்க விலை உயர்ந்தால் அவர்களுக்கு முன்பதிவுசெய்யப்பட்ட நாளன்று இருந்த விலைதான் வழங்கப்படும்.

வாடிக்கையாளர்கள் இந்தப் பாதுகாப்பினைப் பெற இவ்வாண்டு நவம்பர் 2ஆம் தேதி வரை 10 விழுக்காடு மட்டும் முன்பதிவு தொகையைச் செலுத்தலாம். இந்தப் பணம் செலுத்தும் முறையை இலகுவாக்க இந்நிறுவனம் தங்களின் செயலி மூலமாக மின்னியல் பணப்பட்டுவாடா செயலாக்கத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

பெருநாள், ‘Artistry Edition’ நகை வகைகளைத் தவிர்த்து MALABAR GOLD & DIAMONDS வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ப வேறு சில நகை வடிவங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் 22 காரட் தங்கத்தில் செய்யப்பட்ட பெல்லா வகை நகை வகைகளும் அடங்கும். இது மகளிர் அனைவரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here