இணையத்தில் போலி வேலை வாய்ப்பு மோசடியில் ஈடுபட்டதாக இருவர் கைது

கோலாலம்பூர், அக்டோபர் 26 :

இணையத்தில் வேலை வாய்ப்பு மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் செராசில் உள்ள ஒரு குடியிருப்பில் இரண்டு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

23 மற்றும் 32 வயதுடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு முன்னர், செந்தூல் மற்றும் செராஸ் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவின் (BSJK) குழுவினால் பிற்பகல் 3.30 மணியளவில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கோலாலம்பூர் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJK) உதவி ஆணையர் முஹமட் மஹிதிஷாம் இஷாக் கூறுகையில், விசாரணைக்கு உதவுவதற்காக ஒரு மடிக்கணினி , 6 தொலைபேசிகள் மற்றும் இரண்டு வங்கி பரிவர்த்தனைக்கு பயன்படும் அட்டைகளும் (ATM cards) கைப்பற்றப்பட்டன.

முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

“மோசடிப் பேர்வழியினர் கடந்த மே மாதம் முதல் செயல்படத் தொடங்கியது மற்றும் உள்ளூரில் பாதிக்கப்பட்டவர்களை குறிவைத்து செயல்படுவதை நாங்கள் கண்டுபிடித்தோம்.

மோசடி செய்ததற்காக குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ் அனைத்து சந்தேக நபர்களும் வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இது தொடர்புடைய தகவல் தெரிந்தவர்கள் 03-2146 0584 /0585 என்ற எண்ணில் கோலாலம்பூர் காவல் நிலையத்தையோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தையோ தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here