தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கான விமானப் பயணம் குறித்து மலேசியாவும் சிங்கப்பூரும் விவாதிக்கும்

தடுப்பூசி போடப்பட்ட மக்களுக்கு பிரத்யேக விமானப் பயணப் பாதை மூலம் எல்லைகளை மீண்டும் திறப்பது குறித்து மலேசியா மற்றும் சிங்கப்பூர் விவாதிக்கும் என்று டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி கூறுகிறார். சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர், சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 29) சந்தித்து இது குறித்து ஆலோசிப்பதாகத் தெரிவித்தார்.

இது நாளை விவாதிக்கப்படும், என்று அவர் வியாழக்கிழமை (அக். 28) நாடாளுமன்றத்தில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். மலேசியா தனது எல்லைகளை வெளிநாட்டு பயணங்களுக்கு டிசம்பர் மாத தொடக்கத்தில் மீண்டும் திறக்க விரும்புகிறது. தற்போது அனைத்து நிலையான இயக்க நடைமுறைகளும் தயாராக உள்ளன.

தற்போது, பிரதமர் டததோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தபடி நவம்பர் 15ஆம் தேதி தொடங்கும்  பயண குமிழி திட்டத்தின் கீழ் மட்டும் அனைத்துலக சுற்றுலாப் பயணிகள் லங்காவிக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். எவ்வாறாயினும், இந்த விவகாரம் தேசிய பாதுகாப்பு கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று நான்சி கூறினார். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் பிரதமர் அறிவிப்பார் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here