சாலை விபத்தில் கணவன்,மனைவி, மகள் பலி -மற்றொரு மகள் படுகாயம்

டுங்கூன்: பண்டார் கேதெங்கா ஜெயா அருகே நடந்த சாலை விபத்தில் பள்ளி தலைமை ஆசிரியர், அவரது மனைவி மற்றும் அவர்களது மகள்களில் ஒருவர் கொல்லப்பட்டனர். நேற்று நடந்த இந்த விபத்தில் மற்றொரு மகள் படுகாயமடைந்துள்ளதாக அல் முக்தாபி பில்லா ஷா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் ஜூல் ஹுஸ்னி அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

இறந்தவர்களில் எஸ்.கே. கெதெங்கா ஜெயா 2 இன் தலைமை ஆசிரியர் முகமட் ஜுகி யூசோஃப், 44, அவரது மனைவி நூர் ஃபர்ஹீதா அலிகான் 41 (தெரெங்கானு தெங்கா (கெதெங்கா) வளர்ச்சி சபை ஊழியர்) அவர்களது மகள் நஸ்ரீன் உமெய்ரா முகமட் ஜுகி 10 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஜாலான் பக்கா-அல்-முக்தாபி பில்லா ஷாவின் Km25 என்ற இடத்தில் ஒரு வளைவில் நிகழ்ந்த விபத்தில் முகமட் ஜுகி மற்றும் நூர் ஃபர்ஹீதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கெதெங்கா ஜெயா ஹெல்த் கிளினிக்கில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது நஸ்ரீன் உமைரா இறந்தார். அவரது சகோதரி டாமியா இர்டினா 13, டுங்குன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விவரம் அறிந்தவுடன் எட்டு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், எஸ்யூவியின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த தம்பதியினரின் உடல்களை அகற்ற வேண்டி இருந்ததாகவும் என்றும் ஜூல் ஹுஸ்னி கூறினார். மேலதிக நடவடிக்கைகளுக்காக சடலங்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here