மலேசிய பூப்பந்து ஜாம்பவான் டான் யீ கான் காலமானார்.

ஈப்போ:

மலேசியாவின் மிகச்சிறந்த இரட்டையர் பூப்பந்து ஆட்டக்காரர்களில் ஒருவரான டான் யீ கான், இன்று அதிகாலை ஈப்போவில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கத்திலேயே அமைதியாக உயிர் நீத்தார். காலை 7.30 மணியளவில் அவரது உதவியாளர் இதைக் கண்டறிந்ததாக அவரது மகன் கென்னத் டான் உறுதிப்படுத்தியுள்ளார்.

1967 இல் ஜகார்த்தாவில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தாமஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தோனேசியாவை வீழ்த்தி மலேசியா சாம்பியன் பட்டம் வென்றதில் யீ கான் மிக முக்கியத் தூணாக விளங்கினார்.

காலஞ்சென்ற இங் பூன் பீ (Ng Boon Bee) உடன் இணைந்து இவர் உருவாக்கிய இரட்டையர் கூட்டணி 1960-களில் உலகையே அதிரவைத்தது நினைவுகூரத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here