கடந்த 24 மணி நேரத்தில் 5,071 பேருக்கு கோவிட் -19 புதிய தொற்றுக்கள் உறுதி , 5,372 பேர் குணமடைந்தனர்

கோலாலம்பூர், நவம்பர் 2 :

கடந்த 24 மணி நேரத்தில் 5,071 கோவிட் -19 புதிய தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .

கடந்த இரு நாட்களில் ஏற்பட்ட தினசரி தொற்றுக்களின் எண்ணிக்கையை விட இன்று சற்று குறைவாகவே புதிய தொற்றுக்கள் பதிவாகியிருக்கின்றது.

இதுவரை பதிவுசெய்யப்பட்ட கோவிட் -19 தொற்றுநோய்களின் மொத்த எண்ணிக்கை இப்போது  2,481,339 ஆக உள்ளது என்று அவர் கூறினார்.

இன்று 5,372 பேர் குணமடைந்திருப்பதாகவும், இதுவரை சிகிச்சையின் பின் குணமடைந்து வீடு திரும்பியவர்களது மொத்த எண்ணிக்கை 2,385,339 ஆக உள்ளதாகவும் சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.

தீவிர சிகிச்சை பிரிவில் 557 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அவர்களில் 498 பேருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது மற்றும் 59 பேருக்கு கோவிட் -19 தொற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையில், 300 நோயாளிகளுக்கு சுவாசக்கருவியின் உதவி தேவைப்படுகிறது , அவர்களில் 207 பேருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது மற்றும் 93 பேருக்கு கோவிட் -19 தொற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இன்று தொற்றுக்குள்ளானவர்களில் 5,056 மலேசியர்கள் மற்றும் 219 வெளிநாட்டவர்கள் அடங்கிய 4,815 உள்ளூர் தொற்றுக்கள் இருந்தன. வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மூலமாக இறக்குமதி செய்யப்பட்ட 15 தொற்றுக்களும் இருந்தன.

புதிய நோய்த்தொற்றுகளில், 2.4 விழுக்காடு மட்டுமே வகை 3, 4 மற்றும் 5 தொற்றுக்கள் என்றும் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று 1.9 விழுக்காட்டினர் இவ்வகைகளிலிருந்து மீண்டுள்ளனர் எனவும் நூர் ஹிஷாம் கூறினார்.

மேலும், நாட்டின் கோவிட் -19 தொற்று விகிதம் (R0, அல்லது R-nott) 0.96 ஆக தொடர்ந்தும் இருக்கிறது. புத்ராஜெயா மிக உயர்ந்த அளவு R-nought 1.06 ஐக் கொண்டுள்ளது என்றும் நூர் ஹிஷாம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here