சிறுவர் இல்லத்திலிருந்து தப்பியதாக நம்பப்படும் 12-15 வயதுக்குட்பட்ட 7 சிறுவர்களை போலீஸ் தேடுகிறது

குவந்தான், நவம்பர் 2 :

நேற்று இங்குள்ள ஒரு சிறுவர்கள் காப்பகத்திலிருந்து இருந்து தப்பியதாக நம்பப்படும் 7 சிறுவர்கள் கொண்ட ஒரு குழுவை போலீசார் தேடிவருகின்றனர்.

பாகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ரம்லி முஹமட் யூசுப் இதுபற்றிக் கூறுகையில், 12 மற்றும் 15 வயதுக்குட்பட்ட 7 சிறுவர்களை காணவில்லை என்ற தகவல் கிடைத்தவுடன், காணாமல் போன அந்த 7 பேரையும் போலீஸ் தேடிவருவதாக அவர் கூறினார்.

“ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில், தப்பித்தவர்களின் நண்பர்களில் ஒருவர் குறித்த சிறுவர்களை காணவில்லை என்று நிர்வாகத்தை எச்சரிக்கை செய்ததை தொடர்ந்து அவர்கள் காணாமல் போனது தெரியவந்ததாகவும் அவர்கள் எந்த குற்றவியல் செயல்களிலும் ஈடுபட்டிருக்கவில்லை என்றும் சிறுவர்கள் கடத்தப்படவில்லை என்றும் கூறினார்.

“பொதுமக்கள் சந்தேகத்திற்கு இடமான சிறுவர்களின் நடமாட்டத்தை கண்டால் உடனடியாக போலீசை தொடர்புகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார். மேலும் அவர்கள் வெகு தூரம் சென்றிருக்க முடியாது என்றும் நிச்சயம் உணவிற்காக அவர்கள் எங்காவது தேடிச்செல்ல வேண்டும் என்று இன்று பாகாங் மாநில போலீஸ் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

அவர்கள் தப்பித்துச் சென்றதற்கான காரணத்தையும் போலீஸ் விசாரணை செய்து வருவதாகவும் ரம்லி கூறினார்.

“மேலும், தப்பித்துச் சென்ற 7 சிறுவர்களும் தமது பாதுகாப்பிற்காக மீண்டும் காப்பகத்திற்கு திரும்புவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம், அத்தோடு அவர்கள் எங்காவது மறைந்திருப்பார்கள் என்றும் நாம் சந்தேகப்படுகிறோம் ,” என்று அவர் கூறினார்.

சிறுவர்கள் மேற்பார்வையாளரின் கவனத்தை ஏமாற்றி, பிரதான வாயிலில் இருந்து தப்பியோடி இருக்கிறார்களா அல்லது ஒரு வேலியை வெட்டி அதன் வழி தப்பித்தார்களா என்று தெளிவாகத் தெரியவில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here