மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு ஹாஜா அஜிசா அமீனா மைமுனா இஸ்கந்தரியா தீபாவளி அன்று அனைத்து இந்துக்களுக்கும் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பண்டிகை அனைத்து இந்து பக்தர்களுக்கும் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வின் ஒளியைக் கொண்டு வரட்டும் என்று புதன்கிழமை (நவம்பர் 3) அதிகாரப்பூர்வ இஸ்தானா நெகாராவின் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளனர். மலேசியாவில் தீபாவளி பண்டிகை இன்று வியாழக்கிழமை (நவ.4) கொண்டாடப்படுகிறது.





















