மலாக்கா மாநிலத் தேர்தலில் BN- 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது

கோலாலம்பூர், நவம்பர் 6 :

மலாக்கா மாநிலத் தேர்தலில் (PRN) பாரிசான் நேஷனல் கட்சி தனது 28 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

BN தேர்தல் இயக்குநர் டத்தோஸ்ரீ முஹமட் ஹசான் இதுபற்றிக் கூறுகையில், 28 தொகுதிகளிலும் முறையே UMNOவிலிருந்து 20 வேட்பாளர்களும் MCAயிலிருந்து 7 வேட்பாளர்களும் MICயிலிருந்து 1 வேட்பாளரும் களமிறங்கியுள்ளதாக கூறினார்.

“28 தொகுதிகளில், 24 புதிய வேட்பாளர்கள் மற்றும் நான்கு பழைய முகங்களும் உள்ளன. BNனிலுள்ள அனைத்து கூட்டணி கட்சிகளின் விவாதத்தின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டது,” என்று கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் (WTCKL) இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

இதில் MICயைச் சேர்ந்த P.சண்முகம் V பிச்சை, காடேக் (Gadek) தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here