நாகேந்திரனின் தூக்குத் தண்டனையை கருணையோடு கைவிடுமாறு டத்தோ பரம் வேண்டுகோள்

மலேசியரான நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலையில் வரும் நவ.10ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது என்பது தான் சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் செய்தி தற்பொழுது இருக்கிறது.

10 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூருக்கு 42.72 கிராம் போதைப்பொருள் கடத்தியதற்காக  நாகேந்திரனுக்கு அந்நாட்டு அரசாங்கம் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

செய்திகள் வழி அறிந்த தகவலின் படி நாகேந்திரனுக்கு மனநல சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருப்பதாக அறிய முடிகிறது. அதனால் சிங்கப்பூர்  அரசாங்கம் அவரின் தூக்குத் தண்டனையை நிறுத்துமாறு கெராக்கான் கட்சியின் துணைத்தலைவர் டத்தோ பரமேஸ்வரன் @ டத்தோ பரம் தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல் மாபெரும் குற்றம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சிங்கப்பூர் அரசாங்கம் சற்று கருணையோடு நாகேந்திரனை தூக்குத் தண்டனையை கைவிடுத்து வேறு தண்டனையை வழங்க வேண்டும் என்று டத்தோ பரம் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here