அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் திருமண பந்தத்தில் இணைந்தார்

உலகளவில் புகழ்பெற்றவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசுப்சாய்க்கு பிரிட்டனில் எளிமையான முறையில் திருமணம் நடந்துள்ளது.

பெண் குழந்தைகள் கல்விக்காக போராடியதற்காக, பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்சாய் மீது தாலிபான் பயங்கரவாதிகள் 2012ல் தாக்குதல் நடத்தினர்.

தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் உயிர் தப்பினார். இதையடுத்து பெண்கள் கல்வி, பெண்கள் உரிமை பற்றி தொடர்ந்தும் தனது கருத்துக்களை ஆணித்தனமாக வெளியிட்டு வந்த மலாலாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று பிரிட்டனில் 23 வயதான மலாலாவுக்கு அஸர் என்பவருடன்  திருமணம் நடந்துள்ளது. இந்த தகவலை அவரே தனது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “இன்று என் வாழ்வில் ஒரு பொன்னான நாள், அஸரும் நானும் வாழ்க்கைக்கு துணையாக இருக்க முடிவு செய்துள்ளோம் . எங்கள் குடும்பத்துடன் பர்மிங்காமில் உள்ள வீட்டில் ஒரு சிறிய நிக்கா விழாவைக் கொண்டாடினோம். உங்கள் ஆசீர்வாதத்தை எங்களுக்கு அனுப்புங்கள்.

எங்கள் பயணத்தில் ஒன்றாக முன்னோக்கி நடப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்” என பதிவிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here