உலகத்தின் பொருளாதார வளம் மிக்க நாடுகளின் பட்டியலை மெக்கின்ஸ்கி அண்ட் கோ நிறுவனமானது வெளியிட்டது.
அதனடிப்படையில் கடந்த 20 ஆண்டுகளில் உலக செல்வமானது உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலகின் 60 விழுக்காடு வருவாயைக் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடம் பிடித்துள்ளது.
2000ம் ஆண்டில் 7 டிரில்லியன் டாலர்களாக இருந்த சீனாவின் பொருளாதார வளம், தற்போது 120 டிரில்லியன் டாலர்களாக அபார வளர்ச்சியடைந்துள்ளது.
மற்றொரு புறம், அமெரிக்காவின் பொருளாதார வளம் 90 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.
மேலும் இவ்விரு நாடுகளே அதிக பணக்காரர்களை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









