புக்கிட் மெர்தாஜாமில் உள்ள ஒரு வீட்டில் தீப்பரவல்; தனித்து வாழும் மூதாட்டி மரணம்

பட்டர்வொர்த், நவம்பர் 17 :

புக்கிட் மெர்தாஜாம், ஜாலான் ஸ்ரீ ரம்பாய், புக்கிட் மெர்தாஜாம் என்ற இடத்தில் உள்ள தாமான் பிஞ்சாயில் இருக்கும் அவரது வீட்டில் இன்று (நவம்பர் 17) தீப்பிடித்ததில் 60 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பண்டார் பெர்டா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு அதிகாரி நிக் சுக்ரி நிக் சாத் இதுபற்றிக் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு நள்ளிரவு 12.13 மணிக்கு அழைப்பு வந்தது என்கிறார்.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வந்தபோது, 30க்கு 40 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள அவரது வீடு முற்றிலும் தீயில் எரிந்து நாசமாகியிருந்தது.

மேலும் “தீயில் இறந்த பெண் தனியாக வாழ்ந்தார்,” என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here