எட்டு வயது சிறுவன் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்

தனது புத்தக விற்பனை மூலம் அதிக தொகை நன்கொடை அளித்த சிறுவன் என்று
மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளான் எட்டு வயது சிறுவன் கிரிஷ். கிரிஷ் ஹரன் நாயர் , 14 பக்கங்கள் கொண்ட ‘ஆழத்தில் மர்மமான போர்’                (A Mysterious War to the deep) என்ற தலைப்பில் எழுதிய புத்தகத்திற்கு விற்பனை மூலம் 7000 ரிங்கிட்டை சேகரிக்க முடிந்தது. கிரிஷ் இந்த சிறுகதையை எழுத ஒரு மாதம் பிடித்தது.

சிறுவன் 7,000 ரிங்கிட்டை வசூலித்து சுல்தான் இப்ராகிம் ஜோகூர் அறக்கட்டளைக்கு (YSIJ) நன்கொடையாக வழங்கியதில் மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார் பெருமைப்பட்டார். இதனைத்தொடர்ந்து ‘ Pillar and the Golden Sword ‘என்ற மற்றுமொரு புத்தகம் எழுதுவதில் தற்பொழுது தாம் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டார்.

இந்த புத்தகத்தில் கிடைக்கும் வசூலையும் நன்கொடையாக அளிக்க திட்டமிட்டுள்ளார். இம்முறை கிடைக்கும் வசூல் தொகையை கோவிட் -19 பெருந்தொற்றால் பெற்றோர்கள்களை இழந்த பாதிப்பட்டவர்களுக்கும் ஆதரவற்ற  இல்லங்களுக்கும் நன்கொடை அளிக்க விரும்புவதாக கூறினார்.

இந்த புத்திசாலித்தனமான மற்றும் அன்பான குழந்தையை வளர்த்ததற்காக இந்த சிறுவனை மற்றும் அவர்களின் பெற்றோரைப் கண்டு பெருமைப்படுகிறேன் என்று ஜோகூர் சுல்தான் தமது அதிகாரப்பூர்வ ஃபுஸ்புக்கில் குறிப்பிட்டாள்ளார். இதற்கிடையில், குழந்தையின் தாயார் ஆர்.ஜெயந்தி (வயது 41) அவரது மகன் எப்போதும் வசதி குறைந்தவர்கள் மீது இரக்க உணர்வை கொண்டிருந்தார் என்று குறிப்பிட்டார். அவருக்கு கிடைத்த இந்த பரிசை நினைத்து பெருமை படுவதாக சொன்னார்.

-கிருஷ்ணன் ராஜு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here