காடெக் தொகுதியில் மஇகா வேட்பாளர் வி.பி.சண்முகம் வெற்றி பெற்றார்

மலாக்கா: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காடெக் சட்டமன்றத் தொகுதியில் மஇகாவின் வேட்பாளர் வி.பி.சண்முகம் வெற்றி பெற்றார்.

இங்கு ஆறுமுனைப் போட்டி நிலவியது. மஇகா- தேசிய முன்னணி சார்பில் வி.பி. சண்முகம், ஜசெக – பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பில் ஜி. சாமிநாதன், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சார்பில் பெர்சாத்து கட்சியின் முகமட் அமிர் பித்ரி முஹாராம் ஆகியோர் இங்கு போட்டியிட்டனர்.

மேலும் இரண்டு சுயேச்சைகளும், புத்ரா கட்சி வேட்பாளர் ஒருவரும் இந்தத் தொகுதியில் போட்டியிட்டனர். கடந்த 2018 பொதுத்தேர்தலில் சாமிநாதன் இந்தத் தொகுதியில் 307 வாக்குகள் பெரும்பான்மையில்தான் மஇகா வேட்பாளரைத் தோற்கடித்தார்.

இங்கு மஇகா வேட்பாளராகப் போட்டியிட்ட வி.பி. சண்முகமும் கடந்த ஓராண்டிற்கு மேலாக இந்தத் தொகுதியின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வந்திருக்கிறார். அதன் காரணமாக இந்தத் தொகுதியின் பிரச்சினைகளையும் தேவைகளையும் சண்முகம் நன்கு அறிந்து வைத்திருந்தார்.

12,641 வாக்காளர்களைக் கொண்ட காடேக் தொகுதியில் 60 விழுக்காட்டு வாக்காளர்கள் மலாய்க்காரர்கள். 24 விழுக்காட்டினர் சீனர்கள். இந்தியர்கள் 16 விழுக்காட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here