இறுதி நிலவரம் : தேசிய முன்னணி 21 தொகுதிகள் – பக்காத்தான் 5 – பெரிக்காத்தான் 2

மலாக்கா : 28 தொகுதிகளைக் கொண்ட மலாக்கா சட்டமன்றத்தில் தேசிய முன்னணி 21 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. தேசிய முன்னணி முதலமைச்சர் வேட்பாளராக முன்னிருத்தப்பட்ட டத்தோஸ்ரீ சுலைமான் முகமட் அலி லெண்டு தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் அப்துல்லா மஹாடி, பக்காத்தான் ஹாரப்பானின் முகமட் அஸ்ரி இப்ராகிம் இருவரும் தோல்வியடைந்தனர்.

பக்காத்தான் ஹாராப்பான் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் 4 தொகுதிகளில் ஜசெக வெற்றி பெற்றிருக்கிறது. பக்காத்தானின் முன்னாள் மந்திரி பெசார் அட்லி சஹாரி அமானா சார்பில் ஒரே ஒரு தொகுதியில் – புக்கிட் கட்டில் தொகுதியில் – வெற்றி பெற்றிருக்கிறார்.

ஆனால் 11 தொகுதிகளில் போட்டியிட்ட பிகேஆர் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் படுமோசமான தோல்வியைத் தழுவியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here