மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் செல்ல பேருந்து டிக்கெட்டுகள் முன்பதிவு

இந்த மாதம் 29ஆம் தேதியிலிருந்து மலேசியாவில் இருந்து சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போர் என 1,440 பேர் வரை உட்லண்ட்ஸ் கடற்பாலம் வழியாக தினமும் சிங்கப்பூருக்கு வர முடியும்.  பிரத்தியேக பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்தி அவர்கள் இங்கு வந்திறங்கியவுடன், தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.

அதேபோல, சிங்கப்பூரில் இருந்து மலேசியர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போர் என 1,440 பேர் வரை மலேசியாவுக்குச் செல்ல முடியும். இரு நாடுகளுக்கும் இடையே நிலவழி தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தின் (விடிஎல்) ஒரு பகுதியாக இந்த ஏற்பாடு அமைகிறது.

இதன்கீழ் இயங்கும் பிரத்தியேக பேருந்துச் சேவைகளுக்கான பேருந்துப் பயணச் சீட்டுகள் நாளை வியாழக்கிழமை (நவம்பர் 25) காலை 8 மணிக்கு விற்பனைக்கு விடப்படும். அதேபோல, சிங்கப்பூரில் இருந்து மலேசியர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போர் என 1,440 பேர் வரை மலேசியாவுக்குச் செல்ல முடியும்.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவழி தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தின் (விடிஎல்) ஒரு பகுதியாக இந்த ஏற்பாடு அமைகிறது. இதன்கீழ் இயங்கும் பிரத்தியேக பேருந்துச் சேவைகளுக்கான பேருந்துப் பயணச் சீட்டுகள் நாளை வியாழக்கிழமை (நவம்பர் 25) காலை 8 மணிக்கு விற்பனைக்கு விடப்படும்.  அவை ஜோகூர் பாருவில் உள்ள லார்கின் சென்ட்ரல் பஸ் டெர்மினல் மற்றும் உட்லண்ட்ஸ் தற்காலிக பஸ் இன்டர்சேஞ்ச் அல்லது சிங்கப்பூரில் உள்ள குயின் ஸ்ட்ரீட் டெர்மினல் ஆகியவற்றுக்கு இடையே இயங்கும்

சிங்கப்பூரில் இருந்து மலேசியா செல்வதற்கான பேருந்துப் பயணச் சீட்டுகள் பெரியவர்களுக்கு $15க்கும் சிறுவர்களுக்கு $8க்கும் விற்கப்படும். மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் வருவதற்கான பேருந்துப் பயணச் சீட்டுகள் பெரியவர்களுக்கு 20 ரிங்கிட்டுக்கும் சிறுவர்களுக்கு 10 ரிங்கிட்டுக்கும் விற்கப்படும். நிலவழி ‘விடிஎல்’ திட்டத்தின்கீழ் பயணம் செய்வோர், தாங்கள் செல்லவிருக்கும் நாட்டின் குடிமக்களாகவோ நிரந்தரவாசிகளாகவோ நீண்டகால அனுமதி அட்டைதாரர்களாகவோ இருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிங்கப்பூர்-மலேசியா நில எல்லைகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, தத்தம் நாடுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களைப் பிரிந்து வாழும் ஊழியர்கள் இல்லம் திரும்ப முடியும்.

இன்று வியாழன் காலை 8 மணி முதல் பேருந்து டிக்கெட் விற்பனை தொடங்கும், மேலும் பயணிகள் புறப்படும் தேதிக்கு குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்னதாக தங்கள் டிக்கெட்டுகளை வாங்க வேண்டும். ஒவ்வொரு பேருந்திலும் 45 பேர் வரை பயணிக்க அனுமதிக்கப்படும்.

-ஆர்.கிருஷ்ணன் ராஜூ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here