இந்தோனேசியாவில் இந்த ஆண்டு முழுவதும் 2,252 இயற்கை பேரழிவுகள் பதிவு

ஜகார்த்தா, நவம்பர் 26 :

இந்தோனேசியா இந்த ஆண்டு முழுவதும் 2,252 இயற்கை பேரழிவுகளை பதிவு செய்தது என அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ தேசிய நிறுவனம் (BNPB) தெரிவித்துள்ளது.

இது ஜனவரி 1 முதல் நவம்பர் 24 வரையுள்ள இந்த ஆண்டின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டது என்று நேற்று Merdeka.com என்ற செய்திப்பக்கம் வெளியிட்டிருந்தது.

இந்த இயற்கைப் பேரழிவு காரணமாக, 76 பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் சொத்து இழப்புகளுடன் 584 இறப்புகளும் பதிவாகியுள்ளது.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளாக வெள்ளம், புயல் மற்றும் நநிலச்சரிவுகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,062 வெள்ள நிகழ்வுகள், 650 சுழற்காற்று, 511 நிலச்சரிவுகள் மற்றும் 263 காட்டுத்தீ ஆகியவை இக்காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்டன.

மேலும் மொத்தம் 27 பூகம்பங்கள் நிகழ்ந்தன, தொடர்ந்து 15 வறட்சி சம்பவங்கள் மற்றும் 24 பெரிய அலை சம்பவங்கள் (large tide incident) என்பனவும் பதிவு செய்யப்பட்டன.

இக்காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட தரவுகளுக்கமைவாக 7,552,866 பாதிக்கப்பட்டவர்கள் இடம்பெயர்ந்தனர், 584 பேர் கொல்லப்பட்டனர், 76 பேரைக் காணவில்லை மற்றும் 13,087 பேர் காயமடைந்தனர் என்று அது தெரிவித்தது.

அத்தோடு இயற்கை அழிவுகளால் மொத்தம் 135,812 வீடுகள் சேதமடைந்தன. இதில் 17,305 வீடுகள் கடுமையாக சேதமடைந்தனர், 24,293 வீடுகள் பகுதியளவிலும் 94,214 சிறிய சேதத்தையும் அடைந்தன..

மேலும் மொத்தம் 3,622 பொது வளாகங்கள் 1,462 கல்வி வளாகங்கள், 1,807 வழிபாட்டு வளாகங்கள் மற்றும் 353 சுகாதார வளாகங்கள் ஆகியவற்றுடன் 503 அலுவலகங்கள் மற்றும் 395 பாலங்களும் சேதமடைந்தன என்று BNPB நிறுவனம் தெரிவித்துள்ளது.

– BNPB

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here