சரவாக்கின் 12வது மாநிலத் தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்களை DAP அறிவித்தது

கூச்சிங், நவம்பர் 26 :

எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சரவாக்கின் 12 வது மாநிலத் தேர்தலில் DAP கட்சியின் 18 வேட்பாளர்கள் போட்டியிடுவார் என்று சரவாக் DAP தலைவர் சங் சிங்க் ஜென் இன்று அறிவித்துள்ளார்.

இத்தேர்தலில் மொத்தமாக DAPயின் 26 வேட்பாளர்கள் போட்டிக்காக களமிறங்கவுள்ள நிலையில், இன்று 18 பேரின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது, ஏனைய 8 வேட்பாளர்களின் பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். அவர்களில் 6 பேர் கூச்சிங்கிலும், 2 பேர் சிபுவிலும் போட்டியிடுவார் என்றார்.

“கூச்சிங் (நாடாளுமன்ற) தொகுதிகளில் 6 வேட்பாளர்களின் பட்டியலை நான் அறிவிக்கவில்லை என்பதற்கு காரணம், கட்சியின் ஒரு தந்திரோபாயம்’ என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here