முகநூலில் தனிநபர் கடன் விளம்பரத்தை நம்பி 17,800 வெள்ளியை இழந்த தனித்து வாழும் தாய்!

ஜெம்புல், நவம்பர் 27 :

முகநூலில் தனிநபர் கடன் பற்றிய விளம்பரத்தை நம்பி, மோசடியில் சிக்கி, தனித்து வாழும் தாய் ஒருவர் RM17,800 இழந்தார் என்று ஜெம்புல் மாவட்ட காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் ஹூ சாங் ஹூக் கூறினார்.

28 வயதான பாதிக்கப்பட்டபெண் இணையத்தில் வணிகம் (online business) நடத்தி வருகிறார், அவர் கடந்த வியாழன் அன்று தனது வீட்டில் இருந்தபோது, ​​​​காலை 10.30 மணிக்கு ஒரு முகநூல் பக்கத்தைப் பார்த்தார்.

பாதிக்கப்பட்டவர், அந்த முகநூல் பக்கத்தில், தனிநபர் கடன் கொடுப்பதாக கூறும் விளம்பரத்தைப் பார்த்ததாகவும், அதனுடாக தான் RM10,000 கடனாகப் பெற விரும்புவதாக கூறி, முகநூல் பக்கத்தில் வழங்கப்பட்டிருந்த இணைப்பைக் கிளிக் செய்தார்.

“சில நிமிடங்களுக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவருக்கு வாட்ஸ்அப் செயலி மூலம் ஒரு செய்தி வந்தது, அதாவது பாதிக்கப்பட்டவர் கடன் பெற வேண்டுமாயின் RM1,000 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட நபர் ஒருவரின் வங்கிக் கணக்கில் ஆன்லைனில் அந்தப் பணத்தை செலுத்தினார்.

“மேலும் பாதிக்கப்பட்டவரிடம் RM2,000 பணத்தினை காப்பீட்டுக்காக செலுத்தும்படி கேட்கப்பட்டார், எனவே மறுபடியும் மற்றொரு நபரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் அவர் பணத்தை வைப்பிலிட்டார். மேலும் அதே கணக்கில் RM2,800 செலுத்துமாறு மீண்டும் கேட்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

நேற்று காலை 10.40 மணியளவில், தான் ஏமாற்றப்பட்டதை உணராத பாதிக்கப்பட்டவர், மீண்டும் கடன் செயலாக்க அமைப்பில் சிக்கல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மீண்டும் RM4,000 செலுத்துமாறு கேட்கப்பட்டார்.

பாதிக்கப்பட்டவர் எளிதில் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சந்தேக நபர், மீண்டும் ஒருமுறை பணம் செலுத்துமாறு கேட்டதாகவும், பாதிக்கப்பட்டவர் மொத்தம் RM8,000 பணம் செலுத்தியதாகவும் அவர் கூறினார்.

“தொடர்ந்து, வருமான வரி விவகாரங்களுக்காக RM5,000 செலுத்துமாறு சந்தேக நபரின் கோரிக்கையின் பின்னரே, தான் ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்டவர் உணர்ந்தார் என்றும் அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடிவில்லை என்றும் கூறினார்.

“பின்னர், பாதிக்கப்பட்டவர் பஹாவ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், மேலும் போலீசார் இவ்வழக்கை குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here