இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய ஆடவர் ஆற்றில் சடலமாக மிதக்க காணப்பட்டார்

தாசேக் கெலுகோர், நவம்பர் 28 :

இங்குள்ள கம்போங் டெபிங் சுங்கை ஆற்றில், நேற்று நண்பகல் கால்சட்டை மட்டுமே அணிந்திருந்த உள்ளூர் ஆடவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தை கிராம மக்கள் நண்பகல் 12.30 மணியளவில் கண்டனர்.

மேலும், சம்பவ இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டப்பகுதியில், 36 வயதுடைய பாதிக்கப்பட்டவரது என நம்பப்படும் ஒரு மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது.

செபெராங் பிராய் வடக்கு மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முஹமட் ரட்ஸி அகமட்டினைத் தொடர்பு கொண்டபோது, ​​அவர் சடலம் கண்டெடுக்கப்பட்டதை உறுதிச் செய்தார்.

மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக, குறித்த இடத்திற்குச் செல்வதற்கு முன்னர், பிற்பகல் 1.30 மணியளவில் போலீசாருக்கு பொதுமக்களிடமிருந்து அழைப்பு வந்ததாக அவர் கூறினார்.

“நேற்றுக் காலை 11.30 மணியளவில் தனது கணவர் வீட்டை விட்டு வெளியேறியதாக, பாதிக்கப்பட்டவரின் மனைவி தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கெப்பாளா பாத்தஸ் மருத்துவமனைக்கு (HKB) கொண்டு செல்லப்பட்டது,” என்று அவர் நேற்று கூறினார்.

உடலைப் பரிசோதித்ததில் குற்றவியல் கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here