கோவிட் தொற்றினால் பிரபல நடன மாஸ்டர் சிவசங்கர் காலமானார்

நடன இயக்குநரும், நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். மூத்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டரின் மனைவி மூத்த மகன் ஆகியோர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் AlG மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதில் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா பாதிப்பால் ஆபத்தான நிலையிலிருந்து இருந்து வந்தார்.அவருக்கு அதிக செலவு கொண்ட சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது.

இந்த சிகிச்சைக்கான கட்டணத்தை அவரது குடும்பத்தினரால் செலுத்த முடியாமல் இருந்தது. இந்நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள தனது அப்பாவுக்கு உதவும்படி சிவசங்கர் மாஸ்டரின் மகன் வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து, திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு உதவ முன்வந்தனர்.

இந்நிலையில், கோவிட் தொற்றுக்கு  சிகிச்சை பெற்று வந்த மாஸ்டர் சிவசங்கர் இன்று காலமானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here