போர்ட்டிக்சனில் சாலைப் போக்குவரத்துத்துறை போலீசாருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் 49 பேருக்கு அழைப்பாணைகள் (summonses) வழங்கப்பட்டன

போர்ட்டிக்சன், நவம்பர் 30 :

நேற்று நண்பகல், நெகிரி செம்பிலான் சாலைப் போக்குவரத்துத் துறையுடன் (JPJ) போர்ட்டிக்சன் மாவட்டப் போக்குவரத்துக் காவல் துறையினர் இணைந்து நடத்திய, சிறப்பு ஒருங்கிணைந்த நடவடிக்கையில் மொத்தம் 122 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, 49 அழைப்பாணைகள் (summonses) வழங்கப்பட்டன.

போர்ட்டிக்சன் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ஐடி ஷாம் முஹமட் கூறுகையில், லுக்கூட்டில் உள்ள ஜாலான் சிரம்பான் – போர்ட்டிக்சன் 11ஆவது கிலோமீட்டரில், குறிப்பாக பதிவு எண் பிழைகளைக் கண்டறிவதற்காக, பிற்பகல் 3.30 முதல் 6 மணி வரை இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

“ஆடம்பரமான அல்லது ஏற்கனவே மாற்றியமைக்கப்பட்ட பதிவு எண்களைக் காண்பிக்கும் குற்றத்தைச் செய்யும் தனியார் மற்றும் வணிக வாகன உரிமையாளர்கள் மீது இந்த நடவடிக்கையில் கவனம் செலுத்தப்பட்டது.

“இது சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 14 (4) மற்றும் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 108 (3) (1) மற்றும் விதி 6 (1) LN 173/1969 ஆகியவற்றின் கீழ் JPJ இன் ஒப்புதலைப் பெறாமல் விதிகளைப் மாற்றுவது குற்றமாகும் . ,” என்று அவர் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறினார்.

எட்டு அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவல்துறை உறுப்பினர்கள் மற்றும் நான்கு ஜேபிஜே அதிகாரிகளுடன் இந்த நடவடிக்கை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாக அவர் கூறினார்.

“மொத்தம் 31 மோட்டார் சைக்கிள்கள், 76 கார்கள், ஐந்து வேன்கள் மற்றும் 10 பல்நோக்கு வாகனங்கள் (MPV) ஆய்வு செய்யப்பட்டு, பல்வேறு குற்றங்களுக்காக 49 அழைப்பாணைகள் வழங்கப்பட்டன,” என்று அவர் கூறினார்.

இதில் பதிவு எண் குற்றங்களுக்காக குறிப்பாக 30 அழைப்பாணைகள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார். அத்தோடு  21 அபராதங்கள் உட்பட மொத்தம் 22 அழைப்பாணைகளும் வழங்கப்பட்டன.

“மேலும், பிரிவு 61 (1) இன் படி மொத்தம் 10 ஆய்வு உத்தரவு அறிவிப்புகளும் வழங்கப்பட்டன” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here