அமெரிக்காவில் கேரள மாணவி சுட்டுக்கொலை

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில்  கேரளாவை சேர்ந்த 19 வயது மாணவி மரியம் சூசன் சுட்டுகொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்த மாணவி, மேத்யூ மற்றும் பின்சி தம்பதியரின் மகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரியம் சூசன் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.அப்போது வீட்டின் மேல் மாடியில் இருந்து  துப்பாக்கி தோட்டாக்கள்  வந்து உள்ளது. தோட்டாக்கள்  அவர் மீது பாய்ந்து  மரணமடைந்து உள்ளார்.அவர் மீது தாக்குதல் நடத்தியவர் சூசன்  வீட்டின் மேல்மாடியில்   வசிப்பவர் என கூறப்படுகிறது.
மாண்ட்கோமரி காவல் துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.உயிரிழந்த மரியம் சூசன் மேத்யூ கேரளா பத்தனம்திட்டாவில் உள்ள நிராணம் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இவர்களது குடும்பம் 4 மாதஙக்ளுக்கு முன்புதான் அமெரிக்கா வந்துள்ளது.இதற்கு முன் அவர்கள் மஸ்கட்டில்  வசித்து உள்ளனர். சூசன் உயர் பள்ளிகல்வியை இந்தியாவில் முடித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here