வாசிப்பு, கணிதம், எழுத்து (3M) பிரச்சினைகள் உள்ள மாநிலத்தில் 1, 2, 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கவனம் செலுத்த எழுத்து, கணிதம் மேம்பாட்டுத் (MoLIB) தொகுதியின் மொத்தம் 51,519 பிரதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, கடந்த அக்டோபரில் கோவிட்-19 காரணமாக பள்ளி மூடப்பட்டதைத் தொடர்ந்து, படி நிலை 1 மாணவர்கள் 3எம் (3M) திறன்களில் தேர்ச்சி பெறுவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜோகூர் கல்வி, தகவல், பாரம்பரியம், கலாச்சார ஆட்சிக்குழு உறுப்பினர் மஸ்லான் பூஜாங் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு இல்லிறுப்புக் கற்றல் கற்பித்தல் (PDPR) செயல்முறையை உறுதி செய்வதற்காக பிகேபியின் தற்போதைய நிலைக்கு ஏற்ப, பொருத்தமான தொகுதிகள் வழங்கப்படுகின்றன. திட்டமிட்டபடி, தொற்றுநோய்க்குப் பிறகு ஜோகூர் மாநிலக் கல்வி இலாகா முதன்மைப்பள்ளி எழுத்தறிவு எண்ணியல் திட்டத்தின் (PLaN) 40 பைலட் பள்ளிகளுக்காக குறிப்பாக, ஆசிரியர் கல்வி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட எழுத்தறிவு, எண்ணியல் தொகுதியின் (MoLIB) பயன்பாட்டை அணிதிரட்டியுள்ளது.
அது தவிர, அனைத்து தொடக்கப் பள்ளிகளையும் உள்ளடக்கிய கேபிஎம் பெர்காசாகு (KPMPperkasaku) முன் முயற்சியின் கீழ் பாடத்திட்ட மேம்பாட்டுப் பிரிவால் எழுத்தறிவு, எண்ணியல் மறுவாழ்வு தொகுதி உருவாக்கப்பட்டது என்று 14ஆவது ஜோகூர் மாநில சட்டமன்றத்தின் நான்காவது அமர்வில் அவர் கூறினார்.
கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு மாணவர்கள் வாசிப்பு, எழுத்து, கணிதம் ஆகிய திறன்களில் தேர்ச்சி பெறுவதை உறுதி செய்வதற்கான ஜோகூர் கல்வி இலாகாவின் முயற்சிகள் பற்றிக் கேட்ட நோர் ரஷிதா ரம்லி (பாசிர் ராஜா-பிஎன்) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.
புத்ரி வங்சா மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் மஸ்லான், தொகுதிகள் அதிகபட்சமாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக மாவட்டக் கல்வி அலுவலக அளவில் வழிகாட்டுதல், கண்காணிப்பு அணிதிரட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
3எம் அடைவில் சிக்கல் உள்ள மாணவர்களிடையே 3எம் திறன்களில் ஆற்றல் பெறுவதற்கான செயல்முறையை இந்த முயற்சி துரிதப்படுத்தலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.