கென்யாவில் திருமணத்தில் பங்கேற்க சென்றவர்கள் பயணித்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 23 பேர் பலி!

கென்யாவில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 23 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

கென்யா தலைநகர் நைரோபிக்கு கிழக்கே 200 கிமீ (125 மைல்) தொலைவில் உள்ள என்சியூ ஆற்றில் உள்ள பாலத்தின் மீது, வேகமாக ஓடும் தண்ணீரை பேருந்து ஓட்டுநர் கடக்க முயன்றபோது பேருந்து ஆற்று நீரினால் அடித்துச் செல்லப்பட்டதை வீடியோ காட்சிகள் காட்டுகிறது.

தேவாலய பாடகர் குழு உறுப்பினர்களை ஏற்றிச் செல்வதற்காக அந்தப் பேருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டது.

இறந்தவர்களில் 4 பேர் குழந்தைகள் உட்பட குறைந்தது 23 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும் அப்போது பேருந்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது தெரியவில்லை.

மேலும் ம்விங்கி, கிடுய் கவுண்டியில் உள்ள ஆற்றின் மீது உள்ள பாதை பேருந்து ஓட்டுநருக்குத் தெரியாது என்று உள்ளூர் செய்தித் தளமான ஸ்டாண்டர்ட் தெரிவிக்கிறது.

-BBC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here