பிரான்சில் 100க்கும் மேற்பட்ட இறந்த பூனைகளை வீட்டில் பதுக்கி வைத்த 81 வயது முதியவர் !

பிரான்சில் நைஸ் பகுதியில் குடியிருக்கும் 81 வயதான நபரது வீட்டிலிருந்து, 100 இறந்த பூனைகளின் சிதைவடைந்த உடல்களும் 20 பூனைகள் உயிருடனும் மீட்கப்பட்டது அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில், பெண் ஒருவர் தனது உறவினரை மருத்துவமனையில் சேர்த்தபோது, அவரது வீட்டில் எண்ணற்ற பூனைகள் இறந்து கிடந்ததைக் கண்டுபிடித்தார்.

திங்களன்று, இந்த விஷயம் தொடர்பில் விலங்கு நல அமைப்பு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பூனைகளின் கழிவுகளை சிறிய பிளாஸ்டிக் அல்லது மரத்தாலான பெட்டிகளில் அந்த முதியவர் பாதுகாத்து வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அந்த முதியவர் செல்லப் பிராணிகளை வளர்க்கும் ஆர்வம் அதிகம் கொண்டவர் என்று உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

திடீரென்று அந்த நபருக்கு உடல்நலக் கோளாறு ஏற்படவே, அவரது உறவினர் பெண் ஒருவரே பூனைகளின் சடலங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்து மிருக நல அமைப்பிற்கு தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற பூனைகளையும் அவ்வமைப்பினர் மீட்டனர்என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here