லாபிஸ், டிசம்பர் 7:
இரண்டு பாரவூர்திகள் மோதிய விபத்தில் SWM சுற்றுச்சூழல் செண்டிரியன் பெர்ஹாட் (SWM) ஊழியர்கள் இருவர் பலியாகினர், மற்றைய பாரவூர்தியின் ஓட்டுநர் படுகாயமடைந்தார் என்று செகாமாட் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் பஹ்ரின் முகமட் நோ தெரிவித்தார்.
SWM நிறுவனத்தின் பாரவூர்தி மற்றும் கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் உலோகங்களை ஏற்றிச் சென்ற மற்றுமொரு பாரவூர்தியும் , ஜாலான் ஜோகூர் பாருவிலிருந்து சிரம்பான் செல்லும் சாலையின் 142 ஆவது கிலோமீட்டரில், இன்று காலை 8 மணியளவில் விபத்துக்குள்ளானது.
“லாபிஸில் இருந்து யோங் பெங்கிற்கு கட்டுமான பொருட்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தி கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் இருந்து SWM பாரவூர்தியுடன் மோதியதால் விபத்து ஏற்பட்டது.
“இதன் விளைவாக, SWM பாரவூர்தியின் ஓட்டுநர், முகமட் ரம்லி இபோர், 58 மற்றும் அவரது தோழர், முகமட் ஹெல்மி கரீம், 30, ஆகியோர் பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே இறந்தனர்,” என்று அவர் இன்று கூறினார்.
கட்டுமான இரும்பு ஏற்றிச் சென்ற பாரவூர்தியின் ஓட்டுநர் நோர் ஃபஸ்லி ரம்லி, 30, என்பவருக்கு தலையில் பலத்த காயமடைந்து, செகாமாட் மாவட்ட மருத்துவமனையில் (எச்டிஎஸ்) சிகிச்சை பெறுகிறார்.
“உயிரிழந்த இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக HDS தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டது, மேலும் இச்சம்பவம் தொடர்பான விசாரணை இன்னும் நடந்து வருகிறது. மேலும் சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் படி வழக்கு விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.








