ஸ்கூடாய், கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அபார அறிவியல் சாதனை

ஜோகூர்பாரு:

ங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வி பயணத்தில் பல விருதுகளை பெற்று, அனைத்துலக அரங்கில் மீண்டும் தடம் பதித்தனர்.

கனடாவில் நடந்த 8வது அனைத்துலக புத்தாக்க கண்டுபிடிப்பு போட்டி 2023 பங்கெடுத்து வெற்றி வாகை சூடினர்.

இவர்கள் ஏழு நாடுகளின் அனைத்துலக புத்தாக்க போட்டியில் தங்க பதக்கங்களை வென்றுள்ளார்கள்.

ஆசிரியை கோமதி சங்கரனின் வழிகாட்டலில் இம் மாணவர்கள் பல வெற்றிப் பதக்கங்களை பெற்றுள்ளனர். இவர்களின் பல புத்தாக்க சிந்தனைகளும் ,புத்தாக்க அறிவியல் கண்டுப்பிடிப்புக்களும் அனைத்துலக ரீதியில் மிக சிறந்த புத்தாக்க விருதினை வென்றுள்ளன.

அண்மையில் மாணவர்கள் வெற்றிவேல், ஷர்வின், யுவன், ரிஷ்வன், மரியா மிராஷினி, ஹாபிலாஷினி, அபிநயா, கெய்லின் மற்றும் சாஷினி கனடா அனைத்துலக புத்தாக்க அறிவியல் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கத்தையும், கனடா நாட்டின் இரண்டு சிறப்பு புத்தாக்க விருதையும் வென்றுள்ளனர்.

மேலும் மாணவர்கள் சிறந்த கண்டுபிடிப்பு விருதையும் நன்சான்றிதழையும் , சிறந்த கண்டுபிடிப்புக்கான தாய்லாந்து சிறப்பு விருது,ஐ.ஆர். ஈரான் ஃபிரி (I.R.IRAN FIRI )விருது, சவுதி அரேபியா சிறந்த சிறப்பு விருது, ஹாங்காங்கின் சிறந்த படைப்பாற்றலின் உயர் நிலை சிறப்பு விருது மற்றும் கனடிய விருதுகளை வென்று மிகப்பெரிய சாதனை செய்துள்ளனர்.

உலக அறிவியல் புத்தாக்க சங்கத்தின் சிறப்பு விருதையும் நன்சான்றிதழையும் பெற்று, நம் நாட்டில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.

மேலும் இப்போட்டியில் மாணவர்களுக்கு சிறந்த வழிக்காட்டியாக இருந்த ஆசிரியை கோமதி சங்கரனுக்கு, இவரின் திறமைக்கு கனடா நாட்டின் சிறந்த தலைமைத்துவ சிறப்பு விருதும் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஜோகூர் (UiTM) யில் நடைப்பெற்ற அனைத்துலக புத்தாக்க போட்டியில் மாணவர் யுகேனும் , மாணவிகள் மரியா மிராஷினி, ஹாபிலாஷினி, அபிநயா, கெய்லின் மற்றும் சாஷினி தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்தையும் விருதையும் வென்றுள்ளனர்.

கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளியின் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.மாயசந்திரன், ஆசிரியை கோமதி , மாணவர்கள் வெற்றிவேல், ஷர்வின், யுவன், ரிஷ்வன், மரியா மிராஷினி, ஹாபிலாஷினி, அபிநயா, கெய்லின் சாஷினி, யோகேன் மற்றும் மாணவனின் பெற்றோர்களையும் வெகுவாக பாராட்டி, இவர்களின் வெற்றி நம் மலேசியாவிற்கும், தமிழ்ப்பள்ளிகளுக்கும் கிடைத்த ஒருமாபெறும் சாதனை எனக்கூறி வெகுவாகவே பாராட்டினார்.

இதற்கிடையில் தரமான வளர்ச்சி பெற்று கல்வித்துறையில் சிறந்த முன்னேற்றங்களை பெற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் மாயசந்திரன் வாழ்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here