சிலாங்கூரில் உள்ள 4 நீர் சார்ந்த கேளிக்கை விளையாட்டு மையங்களில் உங்கள் பொழுதைக் கழியுங்கள்

வருகையாளர்களுக்கு மிகவும் பிடித்த இடங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன

தேசிய மீட்சித் திட்டத்தின் 3ஆம் கட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள நீர் சார்ந்த கேளிக்கை விளையாட்டு மையங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன.

எனவே மக்கள் தங்கள் குழந்தைகளுடனும் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இந்த மையங்களுக்குச் சென்று நீச்சல் சார்ந்த விளையாட்டுகளை மேற்கொள்ளத் தயாராகுக.

இந்த நீர் சார்ந்த கேளிக்கை விளையாட்டு மையங்கள் பலரும் அதாவது வயதைக் கடந்து விரும்பும் சுற்றுலாத் தலமாக விளங்குகின்றன.

இந்த மையங்களைப் பற்றி நினைத்தாலே நமக்குத் தானாக நீர் சறுக்கு, நீச்சல் குளங்கள் தான் நினைவுக்கு வரும். அதே சமயம் இந்தக் கேளிக்கை மையங்கள் அனைத்தும் தங்களின் தனித்துவ அம்சங்களைக் கொண்டுள்ளன.

இந்நிலையில் சிலாங்கூர் மாநிலத்தில் நீர் சார்ந்த கேளிக்கை விளையாட்டு மையங்களுக்கு இரு தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். கீழ்க்காணும் நீர் சார்ந்த கேளிக்கை மையங்களுக்கு உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் வார இறுதியில் பொழுதைக் கழிக்கத் தயாராகுங்கள்.

1. Sunway Lagoon
சுபாங் ஜெயா சன்வே சிட்டியில் இருக்கும் Sunway Lagoon
நீர் சார்ந்த கேளிக்கை மையத்தை கேள்விப்படாமல் யார் இருக்க முடியும்? இதர மையங்களைப் போலவே இந்த மையத்தில் மக்களைக் கவரும் வண்ணம் நீர் சறுக்கு விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. இது தவிர Vuvuzela, Little Zimbabwe, Waterplexx 5D, Surf Beach இன்னும் பல அம்சங்களும் மக்களைக் கவரும் வண்ணம் உள்ளன.
இந்தக் கேளிக்கை விளையாட்டு மையம் அக்டோபர் 7ஆம் தேதி திறக்கப்பட்டதை அடுத்து மக்களைக் கவரும் வண்ணம் Camp Out at Sunway Lagoon எனும் கோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இதுவரை பார்க்காத அனுபவத்தைப் பெறுவதற்கு Sunway Lagoon – இல் தங்கி மகிழ்ச்சி அடையுங்கள்.

 

2. Bangi Wonderland Theme Park & Resorts

Bangi Wonderland 12 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்ட நீர் சார்ந்த கேளிக்கை விளையாட்டு மையமாகும். இந்த மையத்தைச் சுற்றி சீரமைக்கப்பட்ட காடுகள் அமைக்கப்பட்டுள்ளன. செமினி – பாங்கி பகுதிகளுக்கு நடுவே அமையப்பெற்றிருக்கும் இந்த மையம் நகர்ப்புற பரபரப்பான வாழ்க்கைச் சுழலில் இருந்து வெளிவர நினைப்பவர்களுக்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளது.
Bangi Wonderland நீர் சார்ந்த கேளிக்கை விளையாட்டு மையத்தில் Anaconda Trail, Body Slide, Green Park உட்பட 14 கவர்ச்சிகர, ஆக்கப்பூர்வமான அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

3. Waterworld @ I-City
எல்இடி வண்ண விளக்குகள், பனி சுழ்ந்த பாதை தவிர்த்து இந்த நீர் சார்ந்த விளையாட்டு மையத்தில் வருகையாளர்களைக் கவரும் வகையில் இன்னும் பல அமசங்கள் உள்ளன.
தென் கிழக்காசியாவிலேயே இந்த மையத்தில் மட்டுமே இருக்கும் Tornado Ride பயணத்தை வருகையாளர்கள் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டும். அது நமது மன தைரியத்தை ஊக்குவிக்கும் ஆக்கப்பூர்வமான பயணமாகும்.

4. Wet World Water Parks Shah Alam
இந்த நீர் சார்ந்த கேளிக்கை மையம் 1996ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்தில் வழங்கப்படும் அம்சங்கள் அனைத்தும் சிறார்களைக் கவரும் வண்ணம் உள்ளது. வாடிக்கையாளர்கள் இங்கு Super Hurricane, Monsoon Buster, Thunder River, and Kiddy Typoon Lagoon போன்ற அம்சங்களில் பங்கெடுக்கலாம். மேலும் சிறுவர்களைக் கவரும் வண்ணம் அவர்களுக்குப் பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்ட நீச்சல் குளங்கள் இம்மையத்தில் உள்ளன.
எனவே இனியும் தாமதிக்காமல் உங்கள் பிள்ளைகளை இந்தக் கேளிக்கை விளையாட்டு மையத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.

இந்த நீர் சார்ந்த கேளிக்கை விளையாட்டு மையங்கள் அனைத்து வயது தரப்பினரையும் கவரக்கூடிய வகையில் கேளிக்கை அமசங்களைக் கொண்டுள்ளதால் கூட்டம் கூட்டமாக அம்மையங்களுக்கு மக்கள் வருகை புரிவார்கள். எனவே அந்த மையங்களில் உள்ள அம்சங்களை அனுபவிக்க ஒரு நாள் போதவில்லை என்றால் வாடிக்கையாளர்கள் அங்கு தங்கும் வசதிகளையும் ஒருசில மையங்கள் ஏற்படுத்தித் தருகின்றன.

சிலாங்கூரில் உள்ள நீர் சார்ந்த கேளிக்கை மையங்கள் தனி மகத்துவத்தைக் கொண்டவையாகும். அங்கு இருக்கும் குதூகலமளிக்கும் நீச்சல் குளங்கள், நீர் சறுக்கு விளையாட்டுகளில் பங்கேற்க நீங்கள் இவ்வார இறுதியில் அங்கு செல்லலாம்.
சிலாங்கூரில் உங்களின் ஒரு நாளை குதூகலமான முறையில் செலவழிக்கக்கூடிய வாய்ப்பினைத் தவற விடாதீர்கள்.

இது மட்டுமல்லாது சிலாங்கூர் மாநிலத்தில் Cuti-cuti Malaysia தொடர இதுதான் சரியான நேரம். இம்மாநிலத்தில் உள்ள பிரபலமான இடங்களுக்கு வருகை தந்து சிறந்த விதிமுறை அனுபவத்தைப் பெறுங்கள்.

சிலாங்கூர் மாநிலத்தில் சுற்றுலா மேற்கொள்வதற்கான தகவல்களைப் பெற நீங்கள் Tourism Selangor’s அலுவலகத்தின் www.selangor.travel என்ற அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை நாடலாம். இது தவிர்த்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், டிக்டாக், யூடியூப் போன்ற சமூக வலைத்தள பக்கங்களையும் நாடலாம்.
#PusingselangorDulu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here