விண்வெளிக்கு சென்று உணவு ஆர்டரை டெலிவரி செய்த கோடீஸ்வரர்

விண்வெளியில் நீங்கள் இருந்தாலும் அங்கும், எங்கள் சேவை உண்டு என்பதை கூறும் விதமாக, ஊபர் ஈட்ஸின் புரொமோஷன் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில், ஜப்பானை சேர்ந்த கோடீஸ்வரர் விண்வெளிக்கு சென்று, அங்கு பணியாற்றும் வீரர்களுக்கு உணவை டெலிவரி செய்துள்ளார்.

டேட்டா யுகத்தில், உணவு ஆர்டர் செய்யும் ஆப்கள் வளர்ச்சி அசுரத்தனமாக உள்ளது. குறிப்பாக, கொரோனா பொதுமுடக்க காலத்தில் ஃபுட் ஆர்டர் ஆப்கள், தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருந்தன.

வாடிக்கையாளர்களின் வரவேற்பு காரணமக ஃபுட் ஆர்டர் ஆப் நிறுவனங்களுக்கிடையே, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் தங்கள் வியாபாரத்தை தக்க வைக்கவும், விரிவாக்கம் செய்யவும் புதுமையான நடவடிக்கைகளை இந்த நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. அந்த வகையில், ஊபர் ஈட்ஸ் நிறுவனம் வித்தியாசமான முறையில் புரொமோஷனை செய்து மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.

அதாவது, விண்வெளியில் இருப்பவர்களுக்கும் ஊபர் ஈட்ஸ் தனது சேவையை வழங்கம் என்பது அந்த புரொமோஷனின் மையக்கருத்து. இதற்காக ஜப்பானை சேர்ந்த தொழிலதிபரி யுசாகு மோசாவா, ஊபர் ஈட்ஸின் டெலிவரி பாயாக செயல்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here