சிலாங்கூரில் வெள்ள பாதிப்பினால் ஏற்பட்ட உயிர் பலி 17ஆக உயர்வு

சிலாங்கூரைச் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மொத்தம் 17 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக மந்திரி பெசார்  டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். 10 பேர் கிள்ளானில் இருந்தும் நான்கு பேர் சிப்பாங்கிலிருந்தும்  மூன்று பேர் உலு லங்காட் பகுதியில் இருந்தும் மீட்டெடுக்கப்பட்டுள்ளனர்.

17 பேரும் வெள்ளத்தில் மூழ்கி இறந்தார்களா என்பதை உறுதிப்படுத்துவது மிக அவசியம் என்பதால்  இந்த மரணங்களுக்கான சரியான காரணத்தை கண்டறியும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்  என்று அவர் இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். இறந்தவர்களின் சடலம் குறித்து தகவல் தெரிவித்தவர்களில்   தன்னார்வலர்களும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here