இந்தியாவில் கொழுந்துவிட்டு எரிந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ; 44 பேர் காயம்

புதுடெல்லி, டிசம்பர் 22 :

இந்தியாவின் கொல்கத்தா நகரிலிருந்து 136 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஹால்டியா ஆயில் கார்ப்பரேஷன் என்ற எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 3 பேர் படுகாயம் காயமடைந்துள்ளதுடன் 44 பேர் லேசான காயங்களுக்கு உள்ளாகினர்.

இது தொடர்பில் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், இந்த சம்பவத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய, போலீஸ் விசாரணைக்கு தமது தரப்பு உத்தரவிட்டுள்ளது என்றார்.

செவ்வாய்க்கிழமை பிற்பகல், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் ஒரு பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, இந்த தீ விபத்து ஏற்பட்டது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here