எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு ஆறு ஆண்டுகள் சிறை வழங்கிய நீதிமன்றம்

கோத்தா கினாபாலு, டிசம்பர் 22 :

எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆடவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பிரம்படியும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

32 வயதான அல்ஹெசாம் ரபிலி, என்பவருக்கு எதிராக இன்று செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நூர் ஹபிசா முகமட் சலீம் முன் குற்றம் சாட்டப்பட்டது. குற்றவாளியும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

திருமணமான அந்த நபர், செப்டம்பர் 19ஆம் தேதி மாலை 4 மணியளவில் ரானாவில் உள்ள தனது வீட்டின் கழிவறைக்குள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14 (a) இன் கீழ் இந்த குற்றமானது 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பிரம்படியும் வழங்க இந்த பிரிவு வழி செய்கிறது.

பாதிக்கப்பட்ட சிறுமியை கழிவறையில் வைத்து, அவர் பாலியல் பலாத்தகாரம் செய்த்தாகவும் , அந்த பெண்ணின் அழுகையை நிறுத்துவதற்காக்க குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு RM1 கொடுத்தார் என்றும் “உன் அம்மாவிடம் சொல்லாதே” என்று கூறி பாதிக்கப்பட்ட பெண்ணை அவர் துன்புறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பேரில், செப்டம்பர் 21 ஆம் தேதி நண்பகல் 2.15 மணியளவில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

யாராலும் ​​பிரதிநிதித்துவம் செய்யப்படாத குற்றம் சாட்டப்பட்டவர், தான் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறி, தனக்கு குறைந்தபட்ஷ தண்டனையை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

எவ்வாறாயினும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்றும் இந்த குற்றத்தின் தீவிரத்தன்மை குறித்தும் கருத்தில் கொண்டு அவருக்கு சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு கோரியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here