தெமெர்லோ, டிசம்பர் 24 :
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், இன்று செக்கோலா ஜெனிஸ் கேபாங்சான் சீ (SJKC) மெந்தகாப்பில் உள்ள நிவாரண மையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார்.
காலை 10.45 மணியளவில் அங்கு வருகை தந்த அவர், சுமார் 45 நிமிடங்கள் அங்கு இருந்தார், இதன் போது மாவட்டத்தின் வெள்ள நிலைமை குறித்தும் விளக்கினார். அந்த நிவாரண மையத்தில் 336 குடும்பங்களைச் சேர்ந்த 938 பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பகாங் பேரிடர் மேலாண்மைக் குழுவின் தரவுகளின் அடிப்படையில், 3,629 குடும்பங்களை உள்ளடக்கிய மொத்தம் 12,663 பேர் தெமெர்லோ மாவட்டத்தில் உள்ள 79 வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
SJKC மெந்தக்காப்பில் உள்ள நிவாரண மையத்தில் தங்கியிருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலருடன் பேசிய பிறகு, பிரதமர் செக்கோலா மெனெங்கா கேபாங்சான் காராக் செட்டியாவில் மற்றொரு நிவாரண மையத்திற்கு புறப்பட்டு சென்றார்.