கோலாலம்பூர், டிசம்பர் 24 :
சிலாங்கூர், பகாங் மற்றும் கிளந்தான் ஆகிய பகுதிகளில் கடந்த வாரம் முதல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
மூன்று மாநிலங்களில் வெள்ளம் காரணமாக மொத்தம் 26 ஆண்கள், 13 பெண்கள் மற்றும் 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தேசிய காவல்துறை தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்தார்.
பதிவான 41 வழக்குகளில், சிலாங்கூரில் 25 இறப்புகளும், பகாங்கில் 15 இறப்புகளும், கிளந்தானில் மற்றொரு இறப்பும் பதிவாகியுள்ளன.
“சிலாங்கூரில் பதிவு செய்யப்பட்ட 25 இறப்புகளில், 17 வழக்குகள் ஆண்களை உள்ளடக்கியது, மற்றய 8 வழக்குகள் பெண்களாவர்.
“பகாங்கில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களில், 8 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் 2 சிறுவர்கள் அடங்குவர் என்றார்.
மேலும் ” கிளந்தானில் ஒரு ஆண் இறந்துள்ளதாக பதிவாகியுள்ளது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அத்தோடு, பகாங்கில் வெள்ளம் காரணமாக 8 பேர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
“பகாங்கில் காணாமல் போனதாகக் கூறப்படும் எட்டு பாதிக்கப்பட்டவர்களில் 7 ஆண்களும் ஒரு சிறுவனும் உள்ளனர்” என்று அவர் கூறினார்.